Monday, March 2
Shadow

‘மாஸ்டர் பிளான்’ பட பூஜை கோலகலமாக நடைபெற்றது.

மாஸ்டர் பிளான்’ பட பூஜை கோலகலமாக நடைபெற்றது

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜை விழா இன்று எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

இப்படம் அரசியல் பின்னணியில் உருவாகும் கலகலப்பான பிளாக் ஹூமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாகும். பொதுமக்கள் அனைவரும் ரசிக்கும் வகையில், சமகால சமூகச் சூழல்களையும் குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அரசியல் தொடர்பான பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் ஒரு குடும்பம், அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையே நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் இப்படம் சுவாரஸ்யமாகச் சொல்லவுள்ளது.

பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இப்படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன்–நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம், சாய் தீனா, பருத்தி வீரன் சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி, விழுப்புரம், செஞ்சி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. கிராமப்புற மற்றும் இயற்கை சூழலுடன் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம், தயாரிப்பு – செ. ஹரி உத்ரா
ஒளிப்பதிவு – அபி அத்விக்
இசை – A.J. அலி மிர்சாக்
படத்தொகுப்பு – பிரசாந்த்
நிர்வாக தயாரிப்பாளர்கள் – மனோவ் செல்வராஜ், தனகோபால், எம். விஸ்வநாதன், சேட்டு K
இணை தயாரிப்பாளர்கள் – பாலகங்காதரன், திவ்யா ஜகத்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Master Plan’ Film Launched with a Grand Pooja Ceremony

The pooja ceremony of the upcoming film ‘Master Plan’, produced by Uthra Productions and DJ International, and written and directed by Se. Hari Uthra, was held today in a simple yet grand manner.

The film is touted to be a lively black-humour comedy set against a political backdrop. Blending satire and dark humour, the story revolves around a family that gets entangled in issues caused by political figures and how they manage to overcome challenges posed by the antagonists. The narrative promises to present social issues and family relationships in an engaging and entertaining manner.
Producers Five Star Kathiresan and P.L. Thenappan, among others, attended the pooja ceremony and conveyed their wishes to the team.

Tarun Vijay and Sayadevi play the lead roles in the film. The supporting cast includes Divya Jegath, Appukutty, Cool Suresh, Sendrayan, Vinodh Sagar, Arun Michael Daniel, Sampath Ram, Sai Dheena, Paruthi Veeran Saravanan, George Maryan and several others in prominent roles.

The shooting is scheduled to commence by the end of April and will take place across locations including Villupuram, Gingee, Theni, Madurai and Dindigul. The team has stated that the visuals will incorporate natural landscapes and rural backdrops.
Further official updates about ‘Master Plan’ will be announced soon.
Technical Crew:
Story, Screenplay, Direction & Production – Se. Hari Uthra
Cinematography – Abi Adhvik
Music – A.J. Ali Mirzaq
Editing – Prasanth
Executive Producers – Manov Selvaraj, Thanagopal, M. Viswanathan, Sethu K
Co-Producers – Balagangadharan, Divya Jegath
PRO – Satheesh (AIM)**