
மத்திய கிழக்கு சூழ்நிலை எதிரொலி – டாக்சிக் உலகளாவிய வெளியீட்டை ஜூன் 4க்கு மாற்றம் மறுதேதியிட்ட தயாரிப்பாளர்கள்
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதலில் மார்ச் 19, 2026 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தற்போதைய பிராந்திய அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு மறுதேதியிடப்பட்டுள்ளது.
மற்றும் இணைந்து தயாரிக்கும் இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படம், பல மொழிகளில் உலகளவில் வெளியிடப்பட உள்ளது. கல்ஃப் நாடுகள் இப்படத்தின் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்குள்ள திரையரங்கு செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விநியோக கூட்டாளியான வழங்கிய ஆலோசனையின் பேரில், வெளியீட்டு தேதியை மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகும் தருணத்தில், மார்ச் 8ஆம் தேதி பெங்களூருவில் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மார்ச் 19 வெளியீட்டை முன்னிட்டு இறுதிக்கட்ட புரமோஷன் நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டிருந்தன. படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மார்ச் 2ஆம் தேதி வெளியாக இருந்தபோதிலும், அதனையும் தற்காலிகமாக நிறுத்தி, முழு புரமோஷன் திட்டத்தையும் இடைநிறுத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிக்கை:
“உலகளாவிய பார்வையாளர்களை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘டாக்ஸிக்’. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை இணைக்கும் கனவுடன் உருவானது.
பல ஆண்டுகளாக செய்த அர்ப்பணிப்பு உழைப்பின் பின், மார்ச் 19 அன்று படத்தை வெளியிட ஆவலுடன் இருந்தோம். ஆனால் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலை, எங்கள் படத்தை அதிகபட்ச பார்வையாளர்களை சென்றடையச் செய்யும் நோக்கத்தில் தடையாக இருக்கக்கூடும்.
எனவே, எங்கள் விநியோக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிகுந்த யோசனைக்குப் பிறகு வெளியீட்டை ஜூன் 4, 2026க்கு மாற்றியுள்ளோம். உங்கள் புரிதலுக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி.”
நட்சத்திர அணிவகுப்பு & தொழில்நுட்பம்
இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் , , , மற்றும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இயக்கியுள்ள இந்த படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை யாஷ் உருவாக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
உலகளாவிய விரிவை குறிவைக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
திரையரங்குகளில் சந்திப்போம்.

Middle East Situation Impact – Producers Reschedule Toxic Worldwide Release to June 4
In light of the ongoing tensions and volatile situation in the Middle East, the worldwide theatrical release of Toxic: A Fairy Tale for Grown-ups has been rescheduled to June 4, 2026. The film was originally slated for release on March 19, 2026, but the date has now been revised considering the prevailing regional instability.
Produced by and , the action-drama is planned as a multi-language global release. As the Gulf region represents a key market for the film, the decision was taken following advice from their major distribution partner , in view of the escalating tensions and the resulting impact on cinema operations across the region.
The announcement comes at a time when the makers were preparing for a grand trailer launch event in Bengaluru on March 8, with media invited from across the country. Final-stage promotional activities had already been mapped out ahead of the original March 19 release date.
Although the film’s first single, Tabaahi, was scheduled to release on March 2, the team has chosen to temporarily withhold the music video and pause all promotional activities.
Official Statement from the Producers
“Toxic: A Fairy Tale for Grown-ups is a film envisioned for a global audience. Shot simultaneously in Kannada and English, it was created with the belief that it would connect with viewers both in India and worldwide.
After years of dedicated effort, we were eager to present the film to audiences on March 19. However, the current uncertainty—particularly in the Middle East—has created circumstances that could impact our goal of reaching the widest possible audience.
In the interest of our partners and audiences, we have made the difficult but carefully considered decision to reschedule the release to June 4, 2026. We thank you for your understanding and continued support.”
Cast & Crew
The film stars in the lead role, alongside , , , , and in pivotal roles.
Written by Yash and directed by , the film has been shot simultaneously in Kannada and English, with dubbed versions in Hindi, Tamil, Telugu, and Malayalam — reinforcing its global ambition.
Toxic: A Fairy Tale for Grown-ups is now scheduled for a worldwide theatrical release on June 4, 2026.
See you at the movies.
