
பெண்ணின் குரலை பேசும் “திருபாவை” – புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!
சமூக உணர்வுகளையும், பெண்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் “திருபாவை”. ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டார்.
பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து சமூகத்தின் மனநிலையை சிந்திக்க வைக்கும் ஒரு கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. வணிக அம்சங்களை விட, சமூகத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த திரைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதன் வலுவான காட்சியமைப்பினால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கதையின் பின்னணி புதுச்சேரி பகுதிகளில் நடைபெறுவதால், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர் உள்ளிட்ட பகுதிகளில் முழு படப்பிடிப்பும் நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தில் ஜனனி கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் சிங்கம்புலி, மதுமிதா, ரமா, முனார் ரமேஷ், முருகதாஸ், வந்தனா, ஃபெரோஸ் கான், சுகன்யா, கௌசல்யா, சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சதீஷ் எஸ். இப்படத்திற்கு இசையமைப்பதோடு பாடல்களையும் எழுதியுள்ளார். தேவசூர்யா கே. ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ஜி. ரஞ்சித் குமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழு
எழுத்து – இயக்கம் – தயாரிப்பு: ஏ.எஸ். ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு: தேவசூர்யா கே.
இசை: சதீஷ் எஸ்.
படத்தொகுப்பு: ஜி. ரஞ்சித் குமார்
சண்டைக் காட்சிகள்: இடிமின்னல் இளங்கோ
உடை வடிவமைப்பு: லட்சுமிநாராயணன்
பாடல்வரிகள்: சதீஷ் எஸ்.
மேக்கப்: மணி
CG: பிரபா
ஒலி வடிவமைப்பு: சதீஷ் எஸ்.
ஸ்டில்ஸ் & பப்ளிசிட்டி டிசைன்: வேலு
தயாரிப்பு நிறுவனம்: ASR FILMS
மக்கள் தொடர்பு (PRO): திரு

“Thirupavai” First Look Unveiled by Puducherry Chief Minister Rangasamy
A new Tamil film titled “Thirupavai”, which focuses on social issues and the life of women, has been announced. The first look poster of the film, written, directed and produced by A.S. Ravichandran under the banner of ASR Films, was officially unveiled today by Puducherry Chief Minister Rangasamy.
The film is said to be a powerful story centered on a woman, aiming to provoke thought about society’s mindset. Instead of relying on commercial cinematic elements, the movie attempts to portray the realistic and raw aspects of society. The recently released first look poster has already received positive responses from audiences and members of the film industry for its intense visual presentation.
Marking his debut as a director, A.S. Ravichandran has not only produced the film but also plays an important role in it. As the story is set against the backdrop of Puducherry, the entire shooting of the film has been completed in Puducherry, Tiruvannamalai, Polur, and nearby areas.
Janani plays the female lead in the film. The movie also features an ensemble cast including Singampuli, Madhumitha, Rama, Munar Ramesh, Murugadas, Vandana, Feroz Khan, Sukanya, Kausalya, and Siddharth in significant roles.
Satheesh S. has composed the music for the film and has also written the lyrics. The cinematography is handled by Devasurya K., while G. Ranjith Kumar is in charge of editing. With the shooting now fully completed, the film is currently in its post-production stage, which is progressing at a brisk pace.
The team is expected to make announcements regarding the audio launch and teaser release soon.
Technical Crew
Story, Screenplay, Direction & Production: A.S. Ravichandran
Cinematography (DOP): Devasurya K.
Music: Satheesh S.
Editor: G. Ranjith Kumar
Stunts: Idiminnal Ilango
Costume Designer: Lakshminarayanan
Lyrics: Satheesh S.
Makeup: Mani
CG: Prabha
Sound Design: Satheesh S.
Stills & Publicity Design: Velu
Production Company: ASR Films
PRO: Thiru
