Friday, May 1
Shadow

சாந்தி டாக்கீஸின் அடுத்த முயற்சி: பாரத் – சான்வே மேக்னா இணையும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’க்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை!

சாந்தி டாக்கீஸின் அடுத்த முயற்சி: பாரத் – சான்வே மேக்னா இணையும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’க்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை!

தமிழ் திரைப்பட இசை உலகில் தொடர்ந்து நினைவில் நிற்கும் ஹிட் பாடல்களை வழங்கி வரும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, தனது தனித்துவமான இசை நடையில் ரசிகர்களின் மனதை கவர்ந்துவருகிறார். அவரின் இசை திரைப்படங்களுக்கு உயிரூட்டுவதோடு, ரசிகர்களை திரையரங்குகளுக்கு இட்டுச் செல்லும் முக்கிய சக்தியாகவும் திகழ்கிறது.

அவரது சமீபத்திய படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது மேலும் ஒரு முக்கியமான திட்டத்தில் அவர் இணைந்துள்ளார். தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’க்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளராக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

இயக்குநர் ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது. இத்திரைப்படத்தில் இளம் தலைமுறை நடிகர் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படத்தின் மூலம் பிரபலமான சான்வே மேக்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்படத்தின் தொழில்நுட்ப அணியிலும் அனுபவமிக்க கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை சி.எஸ். பாலச்சந்தர் கவனிக்க, ஆடை அலங்கார வடிவமைப்பை கிருத்திகா சேகர் மேற்கொள்கிறார்.

முன்னதாக ‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற படங்களின் மூலம் பான்-இந்திய அளவில் கவனம் பெற்ற சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்தின் மூலம் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Santhi Talkies’ Next Venture: Nivas K. Prasanna on Board for Bharath–Saanve Meghna Starrer ‘Production No. 4’

Music composer Nivas K. Prasanna, known for delivering memorable hit songs in Tamil cinema, continues to impress audiences with his distinctive musical style. His compositions not only enhance the emotional depth of films but also play a key role in drawing audiences to theatres.

Following the success of his recent works, he has now signed on for another promising project. It has been officially announced that Nivas K. Prasanna will compose the music for ‘Production No. 4’, the upcoming film produced by Arun Viswa under the banner of Santhi Talkies.

Directed by Harihara Suthan Azhagiri, the film has generated considerable buzz ever since its announcement. It stars young sensation Bharath in the lead role, alongside Saanve Meghna, who gained recognition with the film ‘Kudumbasthan’.

The shooting of the film is currently progressing at a brisk pace, with the team confident of wrapping it up within the planned schedule.

The technical crew includes experienced talents, with cinematography by Theni Easwar, art direction by C.S. Balachander, and costume design by Krithika Sekar.

Santhi Talkies, which has earned pan-Indian recognition through successful films like ‘Maaveeran’ and ‘3BHK’, is expected to continue its winning streak with ‘Production No. 4’.