
குடும்ப உறவுகளின் இனிமையை நகைச்சுவையுடன் சொல்வது ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ – ஜியோஹாட்ஸ்டாரின் புதிய முயற்சி!
இந்திய டிஜிட்டல் பொழுதுபோக்கு உலகில் குடும்ப கதைகளுக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த அசல் தயாரிப்பாக ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ என்ற புதிய வெப்சீரிஸை அறிவித்துள்ளது. மே மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடர், சமகால குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் இயல்பாக பதிவு செய்யும் முயற்சியாக உருவாகியுள்ளது.
முன்னதாக பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்ற ‘உப்பு புளி காரம்’ தொடரின் வெற்றி பாதையைத் தொடர்ந்து, அதே தயாரிப்பு குழுவின் புதிய படைப்பாக உருவாகும் இந்த தொடர், குடும்ப வாழ்க்கையின் உண்மையான முகத்தை பிரதிபலிக்கிறது. நகைச்சுவை, உணர்ச்சி, வாழ்க்கைச் சவால்கள் ஆகியவற்றை சமநிலையுடன் இணைக்கும் இந்த கதை, நான்கு உடன்பிறந்தவர்கள் சுற்றி நகர்கிறது.
தனித்துவமான கனவுகள், வேறுபட்ட வாழ்க்கைத் தேர்வுகள், மற்றும் அவற்றால் உருவாகும் உறவு மோதல்கள் – இவற்றை எல்லாம் தாண்டியும் குடும்ப பிணைப்பின் வலிமையை எடுத்துக்கூறும் விதமாக கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக உணரப்படும் வகையில் இயல்பான குணநலன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் போஸ் வெங்கட் குடும்பத்தை கட்டுப்பாட்டுடன் நடத்தும் தந்தையாகவும், காயத்ரி சாஸ்த்ரி அமைதியான ஆனால் உறுதியான இல்லத்தரசியாகவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
‘உப்பு புளி காரம்’, ‘போலீஸ் போலீஸ்’ போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இந்த தொடரை இயக்கியுள்ளார். அவரின் இயல்பான கதை சொல்லல் பாணியும், குடும்ப உணர்வுகளை நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறனும் இந்த தொடரின் முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர், வாரந்தோறும் புதிய எபிசோடுகளாக வெளியாகும். குடும்ப மதிப்புகள் மற்றும் இன்றைய வாழ்க்கை முறைகளை இணைக்கும் இந்த தொடர், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ – சிரிப்பும், சிந்தனையும், உணர்ச்சியும் கலந்த ஒரு குடும்ப பயணம். மே மாதம் முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பார்க்க தயாராகுங்கள்!

“Brothers and Sisters” Promises a Heartfelt Family Journey with Humor – JioHotstar’s New Original Series Announced
Expanding the landscape of digital entertainment in India, JioHotstar has announced its upcoming original web series, “Brothers and Sisters,” a refreshing take on modern family dynamics. Set to premiere this May, the series aims to capture the essence of everyday relationships, blending emotional depth with lighthearted moments.
Following the success of the widely appreciated series “Uppu Puli Kaaram,” the same creative team returns with this new venture, offering an engaging portrayal of family life. The story revolves around four siblings, each with their own ambitions, personalities, and life choices, navigating the complexities of relationships while staying bound by strong familial ties.
The narrative delicately balances humor, emotions, and real-life challenges, presenting characters that audiences can easily relate to. The series highlights how differences and conflicts coexist with love and unity within a family.
The show features Bose Venkat as a disciplined family head who runs a textile showroom, while Gayathri Shastry plays the calm and composed homemaker who holds the family together. The ensemble cast also includes Raj Ayyappa, Nikhila Shankar, Luthuf, Kishore, Shravnitha, and Pramodhini in key roles.
Directed by Chidambaram Manivannan, known for his work in “Uppu Puli Kaaram” and “Police Police,” the series is expected to carry his signature storytelling style that beautifully captures emotional nuances and everyday realism.
Comprising 100 episodes, “Brothers and Sisters” will be released weekly, offering a consistent and engaging viewing experience. With its strong focus on family values and contemporary life, the series is poised to resonate with a wide audience.
“Brothers and Sisters” is more than just a show—it’s a heartfelt journey filled with laughter, emotions, and meaningful connections. Get ready to stream it on JioHotstar this May!
