
புதுமுகங்கள் யாகவன், சிவகுரு கதாநாயகர்களாகவும், காயத்ரி, கமலி கதாநாயகிகளாகவும் நடிக்கும் படம் ‘மங்களாபுரம்’. ‘ஸ்ரீஅங்காளம்மன் மூவீஸ்’ பட நிறுவனம் சார்பில் புதுவை ஜி.கோபால்சாமி தயாரித்திருக்கும் இந்த படத்தை பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி அனுபவம் பெற்ற ஆர்.கோபால் இயக்கியுள்ளார். வருகிற 12-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் குறித்து இயக்குனர் ஆர்.கோபால் கூறும்போது,
‘‘புதிதாக திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஜமீன் பங்களாவுக்கு குடியேறுகிறார்கள். அந்த பங்களாவுக்குள் அவர்களை ஒன்று சேர விடாமல் ஒரு அமானுஷ்ய சக்தி தடுக்கிறது. அந்த அமானுஷ்ய சக்தி யார்? இளம் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தரும் பரபரப்பான திரைக்கதைதான் ‘மங்களாபுரம்’’ என்றார்.
இந்த படத்தில் அஜய் ரத்னம் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி, சந்தோஷ், வேலுசாமி, பேபி தர்ஷினி, பேபி மகதி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஒளிப்பதிவை திருஞான சம்மந்தம் செய்திருக்க, கார்த்திகேயன் மூர்த்தி இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை மட்டும் ட்ரைலர் வெள்யீட்டு விழா இன்று காலையில் நடைபெற்றது இதில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பகளைஞர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். எல்லோரும் பேசும் போது இந்த படத்தின் கதை மற்றும் இயக்குனர் மீது அதிக ம்னம்பிக்கயுடன் பேசுவது நிச்சயம் வெற்றியை எதிர்பார்க்கலாம்.
