
மங்களகரமான பேய் படம் “மங்களபுரம்”
புதுமுகங்கள் யாகவன், சிவகுரு கதாநாயகர்களாகவும், காயத்ரி, கமலி கதாநாயகிகளாகவும் நடிக்கும் படம் ‘மங்களாபுரம்’. ‘ஸ்ரீஅங்காளம்மன் மூவீஸ்’ பட நிறுவனம் சார்பில் புதுவை ஜி.கோபால்சாமி தயாரித்திருக்கும் இந்த படத்தை பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி அனுபவம் பெற்ற ஆர்.கோபால் இயக்கியுள்ளார். வருகிற 12-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் குறித்து இயக்குனர் ஆர்.கோபால் கூறும்போது,
‘‘புதிதாக திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஜமீன் பங்களாவுக்கு குடியேறுகிறார்கள். அந்த பங்களாவுக்குள் அவர்களை ஒன்று சேர விடாமல் ஒரு அமானுஷ்ய சக்தி தடுக்கிறது. அந்த அமானுஷ்ய சக்தி யார்? இளம் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தரும் பரபரப்பான திரைக்கதைதான் ‘மங்களாபுரம்’’ என்றார்.
இந்த படத்தில் அஜய் ரத்னம் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். டெல்லி கணேஷ், பெஞ்சமின்...