
பொதுவாக ஒரு முன்னனி ஹீரோ படம் வெளியாகுது என்றாலே இங்கு திரையரங்கம் பிரச்சனைவரும் இதனால் பல சின்ன படங்கள் ரிலீஸ் தள்ளிபோகும் ஆனால் இப்ப ஒரே சமயத்தில் இரண்டு பெரிய முன்னணி ஹீரோகள் படம் வெளியாகபோகிரதாம் என்ன ஆகிபோகிறதோ திரையரங்கம் ஒரு பக்கம் ஒரு பக்கம் ரசிகர்கள் இணையதளங்களை சிதற அடிக்கபோகிறார்கள் என்பது உறுதி .சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் கொஞ்சம் உஷாரா இருங்க ஆகஸ்ட் மாதம் இல்லை செப்டம்பர் மாதம் ரிலீஸ்க்கு திட்டம் போடுங்க இல்லை உங்க பாடு திண்டாட்டம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இந்த படத்தின் படப்பிடிப்பை ஐரோப்பாவில் முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பினர். மிக சுறுசுறுப்பான இயக்குநர் என்றால் அது சிறுத்தை சிவா தான்.
ஐரோப்பாவில் இருந்து வந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஓய்வெடுத்த சிறுத்தை சிவா தனது அடுத்தக்கட்ட பணிகளான டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற பணிகளை தொடங்கிவிட்டார்.
கமலின் விஸ்வரூபம் படம்-2 படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்ததுள்ள நிலையில் உள்ளது. இருப்பினும் கிராபிக்ஸ் போன்றவற்றால் ரிலீஸ் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாகுபாலி-2 ஆனது கமலுக்கு டானிக்கை கொடுத்தது போல கமலை சுறுசுறுப்படைய செய்துள்ளது. இதனால் படம் விரைவில் வெளியாவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பு தரப்பும், கமலும் எடுத்து வருகின்றனர்.
விவேகம் மற்றும் விஸ்வரூபம்-2 ஒரே நாளில் வெளியாகி மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.