
இந்தியாவில் இன்று பல பிரச்சனைகள் உள்ளபோது ஏன் நம் தமிழ் நாட்டில் மேலும் பல பிரச்சனைகள் உள்ளப்போது தற்போது தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சனை ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பதை குறித்து விவாதம் தான் இன்றய ஊடகங்களிலும் இன்றைய முக்கிய பேச்சு இது தான் ஆனால் அவருக்கு அவர் நிலையில் இன்னும் ஒரு தீர்க்கமானதொரு முடிவு எடுக்கமுடியவில்லை என்பது தான் சோகம். அதை விட மிக நகைசுவையான நிகழ்வு என்றால் அது இன்றைய அரசியல் சிஸ்டம் சரியில்லை ஜனநாயகம் சீர்கெட்டுள்ளது இதை முதலில் சரி செய்யவேண்டும் என்று மிக வேடிக்கையாக பேசியுள்ளார்.
இவர் சமீபத்தில் ரசிகர்களை சந்திக்க ருபாய் வாங்கியதாக சொல்லப்பட்டது இது வெறும் கிசு கிசு என்று தான் பலர் அமைதி காத்தனர் ஆனால் இது முற்றிலும் உண்மை என்று வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது ஒவ்வொரு மாவட்டத்துக்கு எற்ப பணம் வசூலிக்கபட்டுள்ளது. இவரை சந்திக்க பணம் ஒரு ரசிகன் என்பவன் தன் பொண்டாட்டி புள்ளைக்கு செலவு பண்ணாமல் ஏன் பெற்ற தாய்க்கு செலவு பண்ணாமல் இவரின் கட் அவுட்க்கு பால் அபிஷேகம் முத்த செய்து வருகிறான் அவன் படம் பார்த்தால் தான் இவருக்கு அடுத்த படம் சம்பளம் என்று தோன்றாமல் ரசிகனின் ரத்தத்தை உரிந்து இன்று சுகமாக வாழ்கை வாழும் தன் மகள் மனைவி என்று எல்லோரும் தமிழ் நாட்டை கூறு போட்டு வாழ்ந்து கொண்டு இருப்பது நாம் அறிந்த விஷயம் இவர்களின் முன்னேற்றத்துக்கு உழைத்த ரசிகனை சந்திக்க பணம் வாங்கி சந்தித்தது மிக கேவலம் என்பது தான் உண்மை 
இன்று ரசிகனை சந்திக்க பணம் வாங்கும் ரஜினிகாந்த் நாளை ஒரு வேலை இந்த தமிழ் நாட்டை அவரிடம் கொடுத்தல் நாட்டின் நிலைமை என்ன ஆகும் என்று சிந்தியுங்கள் ரசிகனிடம் பணம் வாங்கி பிழைப்பு நடத்தும் இவர் எல்லாம் ஒரு தலைவர் நாட்டின் எதிர்காலம் என்று நம்பும் ரசிகர்களை நினைத்தால் பாவம்

