
பொன் ராம் இயக்குநர் சிவகார்த்திகேயன் வைத்து இயக்கிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். இயக்குநரிடம் இருக்கும் திறமையைப் பார்த்து அவரை தன் க்ரூப்புக்குள்ளேயே வைத்து பொத்தி பொத்தி பார்த்துக்கொள்கிறார் அந்த ஹீரோ. இரண்டு ஹிட்களோடு இப்போது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார்.
ஆனால் இயக்குநருக்கு ஹீரோவின் கம்பெனி தரும் சம்பளம் திருப்தியாக இல்லையாம். அடுத்த படத்தில் தயாரிப்பாளராக களம் இறங்க முடிவு செய்திருக்கிறாராம். அந்த படத்தின் ஹீரோ வேறு யாருமல்ல அந்த இயக்குநரின் ஆஸ்தான காமெடியனான புஷ்பா புருஷன்தான் அதாங்க . பரோட்டா சூரி ‘ஒரு இயக்குநர் சொல்லி’ தான் ஸ்லிம் ஆனதாக சொல்கிறாரே… அந்த இயக்குநர் இவர்தானாம்.
