
உலக சினிமா ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் படம் என்றால் அது அஜித்தின் விவேகம் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம் காரணம் படத்தின் ட்ரைலர் அந்த அளவுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது அதோ படத்தின் நட்சத்திரமும் படத்தின் கதை களமும் இந்திய சினிமாவுக்கு புதுமை என்று சொல்லபடுகிறது இந்த நிலையில் இந்த படத்தின் கதை வெளியாயுள்ளது
சமூக வளையதளங்களில் பகிரப்படும் தகவல்களின் படி, வெளிநாடுகளின் சதிகளில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார்.
பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஏற்படவுள்ள மிகப்பெரிய ஆபத்து கண்டு பிடிக்கப்படுகிறது, இந்த பயங்கரவாத தாக்குதலை முறியடிப்பதற்காக அஜித் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது.
அந்த குழு பயங்கவாதிகளிடம் போராடி எப்படி வெற்றி பெறுகிறது என்பது தான் படத்தின் கதை என்பது போல தகவல் தீயாய் பரவி வருகிறது.
இந்த கதைக்கு ஏற்றார் போலவே விவேகம் டீசரிலும் கவுன்ட்-டவுன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த கதை தான் உண்மையாகவே விவேகத்தை கதையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
