Saturday, June 27
Shadow

பேயைக் கண்டுபிடிக்கப் போனவன் பேயாக மாறிய கதை : ‘சூறக்காத்து ‘ படம் !

ஸ்ரீவின் மூவீஸ் சார்பில் உருவாகியிருக்கும் படம் ‘சூறக்காத்து’ . இது, சற்று வித்தியாசமான கதைக்களம் கொண்டது.

கதை நிகழும் அந்த ஊரில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கி்ன்றன . அதைக் கண்டு அஞ்சி நடுங்கும் ஊர் மக்கள் அவை பேயால் நடை பெறுவதாக நம்புகிறார்கள். பேயெல்லாம் பொய், நான் இதை நிரூபிக்கிறேன் என்று அந்த ஊருக்குச் செல்கிற நாயகன் , ஒரு கட்டத்தில் பேயாக மாறுகிறான்.அது எப்படி நடந்தது? முடிவு என்ன? என்பதே’சூறக்காத்து “படம் .

இப்படத்தை எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் நந்தகுமார். லீமா பாபு நாயகியாக நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர். ‘மதராசப்பட்டின’த்தில் ஆர்யாவின் தங்கையாக வந்தவர். ‘மாஙகா ‘ பட நாயகியும் கூட.

இப்படத்துக்காகத் திரைக்கதை அமைத்து இருப்பதுடன் வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார் இயக்குநர் சரவண சக்தி.

மேலும்இப்படத்தில் விஜய் டிவியில் பிரபலமான பல முகங்கள் காமெடி குணச்சித்திர வேடங்களில் வருகிறார்கள்.

“பேய்களைவிடச் சமூகத்தில் உலவும் கொடியர்களான சமூக விரோதிகள் மோசமானவர்கள் என்கிற கருத்தும் படத்தில் உணர்த்தப்பட்டுள்ளது. ” என்கிறார் இயக்குநர் நந்தகுமார்.

‘சூறக்காத்து ‘ படப்பிடிப்பு விருதுநகரில் பெரும் பகுதி நடைபெற்றுள்ள போதும் பின்புலக் காட்சிகளுக்காக குற்றாலம் , திருநெல்வேலி , திண்டுக்கல் , வேலூர் என தமிழ்நாட்டிலும் , கேரளா, ஆந்திரா என பிற மாநிலங்களில் உள்ள பல்வேறு ஊர்களிலும் நடைபெற்றுள்ளது. இப்படி 75 நாட்கள் பயணித்துள்ளது படக் குழு .

படத்திற்கு ஒளிப்பதிவு -கேசவன் , இசை -பரிமளவாசன், பாடல்கள் – முத்து விஜயன் , திருநாவுக்கரசு, படத்தொகுப்பு – யோகி , நடனம் – சீனுப்பிரியா, தினேஷ் , ஸ்டண்ட் – அசோக்ராஜ் .

முழு நீள ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள ‘சூறக்காத்து’ நவம்பர் 17-ல் வெளியாகிறது .

Leave a Reply