
பொதுவாக தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் என்றால் அது ரஜினிகாந்த்,விஜய்,அஜித் மற்றும் கமல்ஹாசன் என்று நாம் அறிந்த விஷயம் இந்த ரசிகர்கள் எல்லாமே இளைய பட்டாளமாகத்தான் இருக்கும் எம்ஜிஆருக்கு தான் அனைத்து வயது ரசிகர்கள் உண்டு குறிப்பாக முதியவர்கள் அந்த வங்கியில் இப்போது அஜித்துக்கு ஒரு பாட்டி மிகத்தீவிர ரசிகையாக இருக்கிறார் அவர் அஜித்தை பற்றி சொல்லும் விஷயம் மிகவும் ஆச்சிரிய படுத்துகிறது
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கும்.
இவருக்கு பெரும்பாலும் இளைஞர்கள் தான் ரசிகர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வயதான பெண்மணி ஒருவர் அஜித்துக்காக பேசும் வீடியோ ஒன்று வைரலாகிறது.
இதில் அஜித் அன்னதானம், ஏழை குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம் என பல உதவி செய்கிறார். மேலும் கொட்டிவாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததாகவும் கூறியுள்ளார்.
அஜித்தை பற்றி தப்பாக பேசுனால் சோடா பாட்டில் பறக்கும் என்றும் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் அந்த பெண் மெட்ராஸ் பாஷையில் கோபமாக பேசிவிட்டு போகிறார்.
