Saturday, November 7
Shadow

ஒரே ஷாட்டில் படம் எடுத்து சாதனை படைத்த இயக்குநர் இசாக் இயக்கத்தில் ‘வெகுளி’ – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில்!

ஒரே ஷாட்டில் படம் எடுத்து சாதனை படைத்த இயக்குநர் இசாக் இயக்கத்தில் ‘வெகுளி’ – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில்!

500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘வெகுளி’ திரைப்படம், வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரு கொடூரமான சம்பவத்தின் பின்னணியில், யாராலும் எளிதில் கணிக்க முடியாத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ் ஆரி நடித்த ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை இயக்கியவர். தற்போது பாடலாசிரியர் பிரியனை கதையின் நாயகனாக வைத்து ‘வெகுளி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

முன்னதாக பிரியன் நடிப்பில் வெளியான ‘அரணம்’ திரைப்படத்தைத் தயாரித்த தமிழ்த் திரைக்கூடம் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள்ளது. வேதா பிலிம்ஸ் சார்பில் விஜயா சரவணன் இணை தயாரிப்பு செய்துள்ளார்.

இப்படத்தில் திவ்யா சந்திரன், பாய்ஸ் மணிகண்டன், ஷர்மிளா, பூவையார், டேனி, சாப்ளின் பாலு, இமான் அண்ணாச்சி, ஈரோடு சரவணன், சேரன்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்களைப் பொறுத்தவரை, நாகார்ஜுன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இலங்கையில் தேசிய விருது பெற்ற ஷமீல் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை தேவராஜும், கலை இயக்கத்தை நட்ராஜும் கவனித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொடூரமான சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான திரில்லர் படங்களைப் போல இல்லாமல், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்களால் எளிதில் கணிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இப்படத்தில் இதுவரை பார்க்காத வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிகர்கள் நடித்திருப்பதும் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, இதுவரை நேர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாய்ஸ் மணிகண்டன் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாப்ளின் பாலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இமான் அண்ணாச்சி முதன்முறையாக இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். பூவையார் கதையின் முக்கியமான திருப்பத்துக்குக் காரணமாக அமையும் கதாபாத்திரத்திலும், டேனி காவல்துறையிடம் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இதற்கிடையே, படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் பாராட்டியதுடன், 13 நொடிகள் மட்டுமே நீக்கப்பட்டு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது படத்தின் உள்ளடக்கம் குறித்த ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே வெளியான ‘வெகுளி’ படத்தின் பாடல்களும் டீசரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

மாறுபட்ட கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அழுத்தமான வசனங்களுடன் உருவாகியுள்ள ‘வெகுளி’ திரைப்படம் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகியுள்ளது.

 

Lyricist Priyan Turns Lead Actor in Director Isaac’s Thriller ‘Veguli’; Film to Release in Theatres on November 20!

‘Veguli’, featuring popular lyricist Priyan in the lead role, is all set to hit theatres on November 20. Directed by Isaac, the filmmaker who made history by creating the Guinness World Record-holding film ‘Agadam’ in a single shot, the upcoming film promises an intriguing thriller packed with unexpected twists.

Priyan, who has written more than 500 songs, including popular tracks such as ‘Mascara’ and ‘Makkayala’, takes on a lead acting role in ‘Veguli’. The film’s release date was officially announced by the makers through an intense new poster, raising curiosity among moviegoers.

The film is produced by Tamil Thiraikoodam, the production house behind Priyan’s earlier film ‘Aranam’. Vijaya Saravanan of Veda Films has co-produced the project. Director Isaac has also written the story and screenplay and helmed the film.

The cast includes Divya Chandran, Boys Manikandan, Sharmila, Poovaiyar, Danny, Chaplin Balu, Iman Annachi, Erode Saravanan and Cheranraj, among others.

On the technical front, Nagarjun has handled the cinematography, while Sri Lankan National Award-winning composer Shameel has scored the music. Devaraj is in charge of editing, and Natraj has worked as the art director.

The story of ‘Veguli’ is reportedly inspired by a brutal incident that recently shocked the entire country. The makers have crafted an unconventional screenplay with several unexpected developments, ensuring that audiences will find it difficult to predict what happens next.

One of the major highlights of the film is Boys Manikandan, who makes his debut as an antagonist. After a considerable gap, Chaplin Balu returns in a significant role. Iman Annachi appears as a Muslim character for the first time in his career. Poovaiyar plays a character that becomes crucial to a major turning point in the story, while Danny portrays a character who finds himself in trouble with the police.

The film has received an ‘A’ certificate from the censor board, with only 13 seconds of footage reportedly removed. The censor board members have also appreciated the film.

The songs and teaser of ‘Veguli’, released recently, have received a positive response from audiences. Several prominent personalities from the film industry who have watched the film have also appreciated the team.

Director Isaac is confident that the film’s distinctive storyline, engaging screenplay and powerful dialogues will satisfy audiences and make ‘Veguli’ a successful theatrical venture.

With growing curiosity surrounding its unique storyline and performances, ‘Veguli’ is gearing up for a theatrical release on November 20.