Thursday, April 23
Shadow

திடீரென புதிர் போடும் விக்ராந்த்

வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான மிஷ்கின், சுசீந்திரனை வைத்து புதிர் ஒன்றை போட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் பொதுவான ஒன்று குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று புதிர் வைத்துள்ளனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `வெண்ணிலா கபடி குழு’. அதன் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. `வெண்ணிலா கபடி குழு’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த பாகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்து வருகிறார்.

சுசீந்திரன் இப்படத்திற்கு கதை எழுத, செல்வ சேகரன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு தான் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் மூன்று பேருக்கும் பொதுவான அந்த ஒன்று என்ன என்பதை அறிய நாளை வரை காத்திருக்கத் தான் வேண்டும்.

Leave a Reply