
ஜெய் நடிப்பில் பலூன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படத்தில் ஜெய் ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
அடுத்ததாக ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர நிதின் சத்யா தயாரிப்பில் ஜருகண்டி படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை பிச்சுமணி இயக்குகிறார்.
இந்நிலையில், ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதனை நடிகை ராய் லக்ஷ்மி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதில் ஜெய்யுடன் ராய் லக்ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா டூயட் பாட இருக்கின்றனர்.

இந்த படத்தை விமல் – சனுசா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற எத்தன் இயக்கிய சுரேஷ் இயக்குகிறார்.
காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படம் பாம்பை மையப்படுத்திய கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
