
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் மட்டுமே நடிக்கிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலுக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. இருவரும் ஒன்றாக ஒருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்நிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் ஸ்ருதிஹாசன் அமைதி காப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய ஸ்ருதிஹாசன், சினிமாவை தவிர்த்து தனக்கு வேறு வாழ்க்கையும் இருக்கிறது. பாடல், இசையில் கவனம் செலுத்துகிறேன். நல்ல கதை அமைந்தால் நடிப்பேன் என்றார்.

இருப்பினும் சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் மற்றும் சரிகாவுக்கு தனது காதலர் மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, ஆதவ் கண்ணாதாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் கலந்து கொண்டார். மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் இவர்களது நெருக்கமான புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், ஸ்ருதிஹாசனும், அவரது காதலரும் டிசம்பரில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.
