Wednesday, April 22
Shadow

ஊட்டியில் படமான திகில் படம் “ ரோஜா மாளிகை “ கெளதம் இயக்குகிறார்

மகாகவி திரைக்களஞ்சியம் வெர்லிங்டன் பாரதியார் பெருமையுடன் வழங்க, தளபதி ஈஸ்வரன் நல்லாசியுடன் பர்ஸ்ட் லுக் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ரோஜா மாளிகை “

அமரன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் ஊர்வசி வத்ராஜ் அறிமுகமாகிறார். மற்றும் நிழல்கள் ரவி, ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, மதுரை முத்து, பாண்டு, கராத்தே ராஜா, கொட்டாச்சி, ரேஷ்மா சுகி நாயக்கர், தேவிஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் நடிக்கிறார்.

இது காமெடி கலந்த ஹாரர் படம். ஐம்பது நாட்கள் முழுக்க முழுக்க ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளது.அமரன் – ஊர்வசி வத்ராஜ் இருவரும் ஐடி துறையில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். திருமணம் நடந்த பிறகு வெளிநாட்டிற்குப் போய் செட்டிலாக ஏற்பாடு நடக்கிறது. திருமண பரிசாக ஊர்வசியின் தாத்தா ஊட்டியில் மிகப்பெரிய மாளிகையை எஸ்டேட்டுடன் பரிசளிக்கிறார். அங்கே போய் தங்கும் அந்த இளம் காதலர்கள் சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் தான் படத்தின் திரைக்கதை.

ஜாலியான அதே நேரம் பரபரப்பான திரைக்கதை மூலம் ரோஜா மாளிகை எல்லோராலும் ரசிக்கும் படமாக உருவாகி உள்ளது. ஆடுகளம் நரேன் சர்ச் பாதராக வேடமேற்று அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றார் இயக்குனர் கெளதம்.

முதல் முறையாக தேவதர்ஷினி – மதுரை முத்து இணைந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். படம் வருகிற ஜூலை 6 ம் தேதி வெளியாகிறது.