
தமிழ் சினிமாவில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த கடைக்குட்டி சிங்கம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருந்தது.
இந்த படத்தை கார்த்தியின் அண்ணனும் பிரபல நடிகருமான சூர்யா 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார்.

குடும்பத்தையும் விவசாயத்தையும் மையமாக கொண்டு உருவாகி இருந்ததால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்து இருந்தது.
இதனால் ஹைதராபாத்தில் நேற்று சக்ஸஸ் மீட் நடைபெற்றது. அப்போது அங்கு மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கார்த்தி ஆட்டோ ஒன்றின் மூலம் சக்ஸஸ் மீட்டிற்கு சென்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
