Tuesday, April 21
Shadow

நடிகர் மற்றும் இயக்குனர் எஸ். ஜே. சூர்யா பிறந்த தினம் பதிவு

எஸ். ஜஸ்டின் செல்வராஜ் என்ற இயற்பெயயர் கொண்ட இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர் இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவரின் ஜஸ்டின் என்ற பெயரை சூர்யா என்று மாற்றிவைத்தவரும் இயக்குனர் வசந்த் தான் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார்.

சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. வெற்றியோடு புதுமையான திரைகதை மூலம் தமிழ் ரசிகர்களிடம் புகழ் பெற்றவர் அதோடு அஜித்தை புதிய பரிமாணத்தில் காண்பித்தவர். அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை. பின்னர் இவரே ஹீரோவாக களம் இறங்கி அதிலும் வெற்றி கண்டவர் இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக உள்ளார் விஜய்யின் மெர்சல் படத்தின் வில்லன் இவர் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்

இவர் நடித்த திரைப்படங்கள்

ஆசை, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, மகா நடிகன், கள்வனின் காதலி, இசை, வியாபாரி, திருமகன்,

இவர் இயக்குனராக பணியாற்றிய திரைப்படங்கள்

வாலி, குஷி, நியூ, நானி, அன்பே ஆருயிரே, புலி, இசை