Saturday, October 10
Shadow

“96” ரீமேக் படத்தில் நடிக்க சமாந்தவுக்கு பயமாம்

திருமணத்துக்கு பிறகும் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்து இருக்கும் நடிகை சமந்தா தெலுங்கில் தொடர் வெற்றி நாயகி இவருக்கு 96 ரீமேக் படத்தில் நடிக்கிறார் இதில் நடிக்க பயமாம் ஏன் தெரியுமா

தழிழ்ல் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்து வெளியான படம் 96. காதல் கதையில் உருவான இந்த படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். தமிழில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தை தெலுங்கிலும் அவரே ரீமேக் செய்கிறார்.

விஜய் சேதுபதி நடித்த ரோலில் சர்வானந்தும், த்ரிஷா நடித்த ரோலில் சமந்தாவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. த்ரிஷா நடித்த வேடம் தனக்கு பெரிய சவாலாக அமைந்திருப்பதாக தெரிவித்திருந்த சமந்தா, சில காட்சிகளில் ரிகர்சல் எடுத்த பிறகு நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

காரணம், மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சாய்பல்லவி நடித்த மலர் டீச்சர் வேடத்தில் நடித்த ஸ்ருதிஹாசனின் நடிப்பு தெலுங்கு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானது. அதனால் த்ரிஷா நடித்த வேடத்தில் தான் நடிக்கும் போதும் அப்படியொரு விமர்சனம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே முக்கிய காட்சிகளில் ரிகர்சல் பார்த்து விட்டு நடிக்கப்போகிறாராம் சமந்தா.