Wednesday, April 29
Shadow

சினிமாவில் நடிக்கும் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர்

நேற்று காலை ஏவிஎம் சரவணன் குத்து விலகு ஏற்ற, இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் கிளாப் அடிக்க, ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி எழுதி இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லெஜன்ட் சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நாயகி கீத்திவா திவாரி நடிக்கிறார். இவர்களுக்கு முக்கிய வேடங்களில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பிராமையா, காளிவெங்ட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடிக்க மிக பிரமாண்டமான படமாக உருவாகிறது.

இன்னொரு கதாநாயகியாக பிரபல நடிகை ஒருவரும் நடிக்க இருக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ். மூர்த்தி அரங்கம் அமைக்க ரூபன் எடிட்டிங்  பொறுப்பை கவனிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, முதல் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

இப்ப்டத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, ஹிமாலயாஸ் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட உள்ளது.

இந்த படத்தில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி.