Wednesday, April 29
Shadow

நிவின் பாலியுடன் கூட்டணி சேரும் அருவி நாயகி அதிதி


2017ம் ஆண்டு தமிழ் சினிமாவை புரட்டி போட்ட படம் என்றால் அது அருவி இந்த படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் அதிதி பாலன்.தன் முதல் படத்திலே தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை திரும்பி பார்க்கவைத்தவர் அறுவி படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதிதிக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

ஆனால் தொடர்ந்து இவரை திரைப்படங்களில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இதற்குமுக்கிய காரனம்னள்ளகதையம்சம் கொண்ட படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்தார். இந்நிலையில் அதிதி தான் நடிக்க இருக்கும் அடுத்த படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

’படவெட்டு’ என்ற மலையாளப் படத்தில் பிரேமம் படத்தின் நாயகன் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கிறார். அதிதி இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

லிஜு கிருஷ்ணா என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.