Tuesday, April 28
Shadow

ஸ்டண்ட் மாஸ்டருக்கான V4 விருதை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் தாயாரிடம் கொடுத்த டைமண்ட் பாபு

தமிழ் திரையுலகில் சாதனை புரிந்த திரையுலக சாதனையாளர்களை நம்ம பீ ஆர் ஓ-கள் நான்கு பேர் இணைந்து‘வி4’ விருது வழங்கி பல ஆண்டுகளாக கௌரவப்படுத்துகிறார்கள்..

அந்த வகையில் நேற்று நடந்த வி 4 விழா குறித்து அந்த வி 4ல் ஒருவரான டயமண்ட் பாபு பகிர்ந்துள்ள சேதியிது :

இங்கே நான் உங்களுக்கு ஒரு தகவலை தெரிவிக்க விரும்புகிறேன்.

பேட்ட & அசுரனின் ஸ்டண்ட் இயக்குனர் திரு பீட்டர் ஹெய்ன் -னுக்கு பெஸ்ட் ஸ்டண்ட் மாஸ்டருக்கான வி 4 விருதைப் வழங்க முடிவு செய்து வருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்..

கண்டிப்பாக வருகிறேன் என்று சொன்னவர் துரதிர்ஷ்டவசமாக அவரது தாயார் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.

இன்று அவர் இந்த விஷயத்தை எனக்குத் தெரிவிக்க அழைத்து, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார்.

அப்போது அவர் தனது வீட்டிக்கு போய் கோப்பையை அவரிடம் ஒப்படைக்க விரும்பியதைச் சொன்ன போது ’அடடே.. வாங்க.. அந்த கோப்பையை என் தாயிடம் ஒப்படையுங்களேன் என்று அவர் கேட்டுக்கொண்டார்,

மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நான் உடனடியாக பீட்டரின் வீட்டிற்கு விரைந்து சென்று கோப்பையை அவரது தாயிடம் ஒப்படைத்தேன் ..

மேலும் அவரது தாயார் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்ம் ..

என்று சொல்லி கூடவே அனுப்பியுள்ள புகைப்படம் நெகிழ வைத்து விட்டு விட்டது..😨👇🏻