Wednesday, April 29
Shadow

ராம் கோபால் வர்மா இயக்கதில் ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் படமாகிறது

ஐதராபாத்தில் நள்ளிரவில் தனிமையில் இருந்த கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஐதராபாத் போலீசார் என்கவுன்ட்டர் செய்து சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா, திஷா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்.

இது குறித்து அவர் ‘ என்னுடைய திஷா திரைப்படம் நிர்பயா கொலை போன்ற பாலியல் பலாத்கார கொலைகளுக்குப் பின் இருக்கும் உண்மையை பேசும். நிர்பயா வழக்கில் நீதிமன்றத்தில் புட்பால் விளையாடும் வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்கும் உடனடி தண்டனையை கொண்டாடும் மக்கள் குறித்தும் விளக்கமாகப் பேசும்.- அப்படீன்னு சொல்லி இருக்கார்