

தனுஷ் படங்கள் என்றாலே ஒரு வித்தியாசம் இருந்து கொண்டே இருக்கிறது இதற்க்கு முக்கிய காரணம் இவரின் கதை மற்றும் இயக்குனர் தேடல் தான் அந்த வகையில் இவரின் லேடஸ்ட் கூட்டணி கார்த்திக் நரேன் அதுவும் மூன்றாவது முறையாக சத்யஜோதி தயாரிப்பில் ஒரே நிறுவனத்துக்கு மூன்றாவது நடிப்பது இது தான் முதல் முறையும்
இந்த ஆண்டு அதிக படங்களில் நடிக்கும் நடிகர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் படங்களில் நடிக்கவுள்ளார். தற்போது அவர் கார்த்திக் சுப்பாராஜின் “சுருளி” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜின் “கர்ணன்” படத்தில் நடிகர் லால், ராஜ்யஸ்ரீ, லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் பலருடன் இணைந்து நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவரான சத்யஜோதி பிலிம்ஸ் நேற்று ஒரு வியக்கத்தக்க தகவலை வெளியிட்டுள்ளது. இவர்கள் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று ஒரு செய்தித்தாள் வடிவத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த செய்தித்தாளிலேயே படத்தின் கதைக்கருவையும் தைரியமாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். “குருமூர்த்தி என்னும் சுய பத்திரிக்கையாளர் தனது மனைவியுடன் சென்னைப் புறநகர்ப்பகுதியில் அவர் தங்கியிருக்கும் வீட்டில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையை அவரது மகன், அவனுடைய தந்தையைப் போலவே துப்பறிந்து உண்மைகளை கண்டறிகின்றான்” என்று அந்த செய்தித்தாளில் தெரிவித்துள்ளனர்.
