Thursday, May 14
Shadow

பார்த்திபனுகக்கு அல்வா கொடுத்த ஹாலிவுட் இயக்குனர்

ஹாலிவுட்டில் திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் – நெசமா?

சில நடிகர்களுக்கு தன்னை பற்றி அன்றாடம் செய்தி பரவிக் கொண்டே இருக்க விரும்பி இல்லாத, பொல்லாத நியூஸை பரப்புவது வாடிக்கை..

அந்த லிஸ்டில் ..

இல்லை என்று சொல்லிக் கொள்ளும்

பார்த்தீபன் என்பவர் இல்லை என்றாலும்

புதுமையான கதைக்களங்களை கையாள்வதில் எப்போதும் கில்லாடியவர் என்பது கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

கடைசியாக அவர் நடித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் உலக அளவில் பெரும் பாராட்டை பெற்றதாம்.

இந்திய சினிமா சார்பில் ஆஸ்காருக்கு செல்லும் படங்களின் பட்டியலில் இடம் பிடிச்சதாக் கூட செய்தியெல்லாம் வந்துச்சுல்லே.

இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படத்தை பார்த்த ஹாலிவுட் இயக்குநர் தன்னைப் பாராட்டி, அவர் இயக்கும் படத்தில் நடிக்க அழைத்ததா ஒரு ட்விட் போட்டாராம்.

உடனே நடிகர் பார்த்திபன் நேரடியாக ஹாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமாகிறார் – அப்படீன்னு சில பல ஊடகங்கள் செய்தியை பரப்பிய நிலையில் ட்விட்டர் மேற்படி ட்விட்-டை தேடிப் பார்த்தா அதை இப்போ காணோம்..