Thursday, April 30
Shadow

கபடதாரி – திரைவிமர்சனம் Rank 3.4/5


போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக இருக்கும் நாயகன் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த மூன்று கொலைகளுக்கு விடை தேடும் கதையே கபடதாரி.

போக்குவரத்து காவல் அதிகாரியாக சிபிராஜ். ஆனால் இவருக்கு கிரைம் பிரிவில் பணியாற்றவே விருப்பம். இந்நிலையில் அவர் எல்லைக்குட்பட்ட பாலத்திற்கு அடியில் மெட்ரோ பாலத்தற்கு அடியில் மூவரின் மண்டை ஓடுகளும் எலும்புகளும் கிடைக்கின்றன. தனது எல்லைக்குள் இந்த விஷயம் நடந்திருப்பதால் தானும் விசாரணைக்குழுவில் இடம்பெற விரும்புகிறார் சிபிராஜ். ஆனால் கமிஷனர் அனுமதிமறுக்கவே தாமாக விசாரணையை தொடங்குகிறார்.

இவரது விசாரணைக்கு பத்திரிகை நிருபர் ஜெயப்பிரகாஷ், இவ்வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி நாசர் ஆகியோர் சிபிராஜுக்கு உதவுகின்றனர். இறுதியில் உண்மையை கண்டுபிடித்தாரா என்பதே மீதிக்கதை.

கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கவலுதாரி படத்தின் ரீமேக்தான் இந்த கபடதாரி. இப்படத்தை சைத்தான், சத்யா படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அடியாள் வேடத்திலும் நடித்துள்ளார்.

சிபிராஜ் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கிறார். விசாரணையில் ஈடுபடும் இடங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால் நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் அனுபவத்திற்கு முன் கொஞ்சம் தடுமாறுகிறார். நந்திதா ஜெயப்பிரகாஷின் மகளாக நடித்துள்ளார். கடமைக்கு வந்துபோகிறார். டூயட் பாடல் இல்லாதது ஆறுதல்.

இசையமைப்பாளர் சைமன் கே கிங்கின் பின்னணி இசை படத்திற்கு பலம் கூட்டியுள்ளது. த்ரில்லர் காட்சிகளில் வரும் பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது. ராசாமதியின் ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. எடிட்டர் பரவீன் கே.எல். இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வை சரி செய்திருக்கலாம்.

கன்னடத்தில் வின்னலாக நடித்த சம்பத் மைத்ரேயா இதிலும் நடித்துள்ளார். ஜேஎஸ்கே சதீஷ்குமார், தனஞ்செயன், சுமன் ரங்கநாதன், சாய் தீனா ஆகியோர் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

சில சில இடங்களில் இருந்த குறைகளை சரிசெய்திருந்தால் கபடதாரி இன்னும் கவர்ந்திழுத்திருக்கும்.

மொத்ததில் கபடதாரி கவர்கிறான்