

தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகைக்கான பல தகுதிகளை பெற்ற நடிகர் என்றால் அது சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் அவர் நடிப்போடு நற்சிந்தனைகளை நமக்கு ஊட்டியவர் அதோடு ஐயா அப்துல் கலாமின் வழியில் பசுமை புரடசி செய்தவர் இப்படி பட்ட மனிதரை கடவுள் நம்மிடம் இருந்து பறித்து கொண்டார். அவருக்கு இறுதி சடங்கு அரசு மரியாதையடன் நடக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று கொண்டு தமிழக அரசு செய்தனர்.
இன்று காலமான கலைமாமணி, பத்மஶ்ரீ திரு.விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், கலை மற்றும் சமூக சேவைகளை கௌரவிக்கும் விதமாக காவல் துறையின் மரியாதையுடன் அன்னாரது இறுதி சடங்குகள் நடத்த ஆணையிட்ட தமிழக அரசுக்கு அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
– தென்னிந்திய நடிகர் சங்கம்
