Thursday, November 19
Shadow

ஊரடங்கில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவிய தொழிலதிபர்.

ஊரடங்கால் பாதிப்படைந்த சினிமா கேஸ்டிங் டைரக்டர் யூனியனைச்சார்ந்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளார் தொழிலதிபர் மணிகண்டன் காந்தி.

ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் பலர் வேலையின்மையில் இருந்துவருகின்றனர். பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் பாதிப்படைந்துள்ளனர். சினிமா துறையை சார்ந்த கேஸ்டிங் டைரக்டர் யூனியனைச்சார்ந்த எண்பதுபேருக்கு உதவும் வகையில் துபாயில் தொழிலதிபராக இருக்கும் மணிகண்டன் காந்தி அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
யூனியன் தலைவர் மனோஜ்கிருஷ்ணா தலைமையில் உருப்பினர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.