
ஒரு கபடி வீரனை குற்ற உலகின் முகமாக மாற்றிய விதி! ஜியோஹாட்ஸ்டாரின் ‘லிங்கம்’ டிரெய்லர் கிளப்பும் பரபரப்பு
கபடி மைதானத்தில் வெற்றிக்காக போராடிய ஒரு இளைஞன், ஒரே ஒரு சம்பவத்தால் குற்ற உலகின் மையப் புள்ளியாக மாறினால் என்ன நடக்கும்? அந்தக் கேள்விக்கான பதிலை தீவிரமான குற்றத் திரில்லர் வடிவில் சொல்ல வருகிறது ஜியோஹாட்ஸ்டாரின் புதிய தமிழ் ஒரிஜினல் தொடர் ‘லிங்கம்’.
ஜூன் 26 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள இந்தத் தொடரின் டிரெய்லர் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான கும்பல் கதைகளைத் தாண்டி, ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் சூழ்நிலைகளையும், அதனால் உருவாகும் பழிவாங்கும் உணர்வையும் ‘லிங்கம்’ மையமாகக் கொண்டுள்ளது.
1990களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் தென் தமிழ்நாட்டில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களின் தாக்கத்தில் உருவாகியுள்ள இந்தக் கதை, காவல் துறையில் சேர வேண்டும் என்ற கனவுடன் வாழும் திறமையான கபடி வீரரைச் சுற்றி நகர்கிறது. வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தில் அவர் எதிர்பாராத கொலை வழக்கில் சிக்க வைக்கப்படுகிறார். அதன்பிறகு அவரது கனவுகள் சிதறுவதோடு மட்டுமல்லாமல், உயிர் பிழைப்பதற்கான போராட்டமே அவரது வாழ்வின் முக்கிய நோக்கமாக மாறுகிறது.
டிரெய்லரில் கபடி போட்டிகளின் அதிரடி, கிராமிய அரசியல், அதிகார மோதல்கள், துரோகம் மற்றும் பழிவாங்கும் உணர்வு ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை காண முடிகிறது. குறிப்பாக, ஒரு அப்பாவி இளைஞன் எவ்வாறு சமூகத்தின் சூழ்ச்சிகளால் அச்சமூட்டும் சக்தியாக மாறுகிறான் என்பதை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது.
நடிகர் கதிர் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எழுத்தாளர் மற்றும் இயக்குநர் லக்ஷ்மி சரவணகுமார் இந்தத் தொடரை உருவாக்கியிருக்கிறார். பிரசாந்த் பாண்டியராஜ் ஷோ ரன்னராக செயல்பட்டுள்ள இந்தப் படைப்பை விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது.
கிராமிய வாழ்க்கையின் நிஜத்தன்மையையும், குற்ற உலகின் இருண்ட முகத்தையும் இணைத்து சொல்லும் இந்தத் தொடர், தமிழ் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தவறான குற்றச்சாட்டு எப்படி ஒருவரின் வாழ்க்கையை முழுமையாக மாற்றுகிறது என்பதைக் கூறும் ‘லிங்கம்’, இந்த மாதம் அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் தொடர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
‘லிங்கம்’ தொடர் ஜூன் 26 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

A Kabaddi Player Turned Into the Face of Crime: JioHotstar’s ‘Lingam’ Trailer Sparks Excitement
What happens when a young kabaddi player chasing success on the field suddenly finds himself at the center of a dangerous crime story? JioHotstar’s upcoming Tamil original series Lingam seeks to answer that question through an intense tale of crime, betrayal, and revenge.
Set to premiere on June 26 on JioHotstar, the series has already generated considerable buzz with the release of its gripping trailer. Moving beyond conventional gangster dramas, Lingam focuses on how unforeseen circumstances can completely alter the course of an ordinary man’s life and transform him into someone he never intended to become.
Inspired by shocking real-life incidents that took place in southern Tamil Nadu during the late 1990s and early 2000s, the story follows a talented kabaddi player whose greatest ambition is to join the police force. Just as he stands on the brink of achieving his dream, he is falsely implicated in a murder case. From that moment on, his aspirations collapse, and survival becomes his only priority.
The trailer showcases a compelling mix of high-energy kabaddi sequences, rural politics, power struggles, betrayal, and revenge. At its core is the transformation of an innocent young man into a feared figure, shaped by circumstances beyond his control.
Actor Kathir leads the cast, alongside Divya Bharathi, Satya, and Poornima Ravi in pivotal roles. The series is written and directed by Lakshmi Saravanakumar, with Prashanth Pandiyaraj serving as the showrunner. It is produced by Vikatan Televistas.
Blending the authenticity of rural life with the dark realities of the criminal underworld, Lingam promises a distinctive viewing experience for fans of Tamil web series. Exploring how a single accusation can change a person’s destiny forever, the series is emerging as one of the most anticipated Tamil originals of the month.
Lingam premieres exclusively on JioHotstar on June 26. :::
