Saturday, October 11
Shadow

மர்டர் மிஸ்ட்ரி வகையில் இதுவரை சொல்லப்படாத புதுமையான கதைக்களத்தில் ஸ்ரீகாந்த் அபிராமி நடிக்கும் புதிய திரைப்படம்

காயத்ரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திகேயன் பாஸ்ட்ரா மற்றும் காயத்ரி கார்த்திக் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

மர்டர் மிஸ்ட்ரி வகையில் இதுவரை சொல்லப்படாத புதுமையான கதைக்களத்தைக் கொண்ட இந்த படத்தில், முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் அபிராமி வெங்கடாச்சலம், சாய் தீனா, ராம்ஸ், கே.பி.ஒய். வினோத், சிறகடிக்க ஆசை தேவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குவது கார்த்திக் டோலக். 2013ஆம் ஆண்டிலிருந்து பல குறும்படங்களை இயக்கியதுடன், சில முக்கிய படங்களில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தற்போது பிரபல நடிகர்களை ஒன்றிணைத்து தனது முதல் முழுநீள படத்தை இயக்கி வருகிறார்.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – கார்த்திக் டோலக்

ஒளிப்பதிவு – வைஷாலி சுப்ரமணியம்

இசை – அபிஷேக் ஏ.ஆர்

எடிட்டிங் – பிரசன்னா ஆர்.சி

நடனம் – விஜி சதீஷ்

மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சாவித்ரி