
“விலங்கு உலகிலிருந்து பிறந்த புதிய போலீஸ் அதிரடி!” — ‘வாரண்ட்’ டிரெய்லர் வெளியீட்டில் உணர்ச்சியும் உற்சாகமும் கலந்த கொண்டாட்டம்
தமிழ் ஓடிடி உலகில் தனித்துவமான கிரைம் த்ரில்லர் கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உருவாகி வரும் நிலையில், அந்த பட்டியலில் அடுத்த முக்கிய வரவாக உருவெடுத்துள்ளது ZEE5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “வாரண்ட்”.
‘விலங்கு’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இந்த முறை நடிகராக மாறி மையக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில் நடைபெற்ற “வாரண்ட்” டிரெய்லர் அறிமுக விழா திரைப்பட நிகழ்ச்சியைப் போன்ற பிரமாண்டத்துடன் நடைபெற்றது.
Sivan Pictures மற்றும் S Studios சார்பில் பிரசாந்த் பாண்டியராஜ், P. விஷால், P.M. ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ள இந்த தொடரை இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் – விக்னேஷ் நடராஜன் கூட்டணி இணைந்து எழுதியுள்ள திரைக்கதை, போலீஸ் பின்னணியுடன் மனித உணர்வுகளையும் கலந்த அதிரடி பயணமாக உருவாகியுள்ளது.

“விலங்கு முடிவல்ல… அது ஒரு உலகம்!”
விழாவில் பேசிய ZEE5 சீரிஸ் ஹெட் ஷாம், “விலங்கு ஒரு சீரிஸ் மட்டுமல்ல, அது பல கதைகளை தாங்கிய ஒரு உலகம். அதன் தொடர்ச்சியாக உருவாகும் கதைகளில் முக்கியமான ஒன்று தான் ‘வாரண்ட்’. சாதாரண மனிதன் எப்படி வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறான் என்பதையே இந்த சீரிஸ் பேசுகிறது” என கூறியதுடன், ‘விலங்கு 2’க்கும் இந்த சீரிஸ் முக்கிய இணைப்பாக இருக்கும் என சுட்டிக்காட்டினார்.
இயக்குநரிடமிருந்து நடிகரான பிரசாந்த்
பிரசாந்த் பாண்டியராஜ் பேசும்போது, “விலங்கு எங்களுக்கு அடையாளம் தந்தது. அதே மாதிரி இந்த ‘வாரண்ட்’ சீரிஸும் மக்களிடம் சேரும் என்ற நம்பிக்கை இருக்கு. இயக்குநராக இருந்த நான், நடிகராக மாறியிருக்கிறேன். இந்த மாற்றத்துக்கும் மக்கள் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்” என்று உணர்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.
அவரை ஹீரோவாக மாற்றிய இயக்குநர் விக்னேஷ் நடராஜன், “இந்த கதையை எழுதும்போதே பிரசாந்த் தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரி என முடிவு செய்தேன். அவர் நடிகராக மட்டுமல்ல, ஒரு கோ-டைரக்டர் போல முழு சீரிஸிலும் உழைத்தார்” என பாராட்டினார்.

“இன்னும் ஐந்து வருடத்தில் MLA ஆக நிற்பார்!” — பாண்டிராஜ் கலகலப்பு
விழாவின் ஹைலைட்டாக அமைந்தது இயக்குநர் பாண்டிராஜின் பேச்சு. “பிரசாந்துக்கு தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் MLA-க்கே நிற்பார் போல!” என்று நகைச்சுவையாக கூறிய அவர், “விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ, அதேபோல இந்த ‘வாரண்ட்’ சீரிஸும் வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
கவின், சுசீந்திரன் உள்ளிட்டோரின் பாராட்டு
நடிகர் கவின், “டிரெய்லர் பார்த்தவுடன் இது வெப் சீரிஸ் என்று கூட தோன்றவில்லை; ஒரு தரமான திரைப்பட அனுபவம் போல இருந்தது” என பாராட்டினார்.
இயக்குநர் சுசீந்திரன், “பிரசாந்த் ஒரு உழைப்பாளி. இயக்குநராக வெற்றி பெற்ற அவர், நடிகராகவும் கவனம் பெறுவார்” என வாழ்த்தினார்.
பாசிட்டிவ் ஷூட்டிங் அனுபவம்
நடிகைகள் கௌசல்யா மற்றும் மீனா இருவரும், படப்பிடிப்பு தளத்தில் இருந்த குடும்ப உணர்வையும், கதையின் சஸ்பென்ஸையும் பற்றி பகிர்ந்தனர். குறிப்பாக மீனா, “ஷர்மி என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ரசிகர்களுக்கு இந்த சீரிஸ் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

திரையுலக தரத்தில் உருவான வெப் அனுபவம்
தயாரிப்பாளர்கள் மதன் மற்றும் சினீஷ் இருவரும், நல்ல வெப் சீரிஸ்களுக்கு பெரிய பட்ஜெட்டும், தரமான கதை சொல்லலும் அவசியம் என வலியுறுத்தினர். “சினிமாவை விட வெப் சீரிஸ் உருவாக்குவது இன்னும் கடினம்” என்ற கருத்தும் விழாவில் கவனம் பெற்றது.
அதிரடி, உணர்ச்சி, போலீஸ் விசாரணை, மனித உறவுகள் ஆகிய அனைத்தையும் கலந்த புதிய அனுபவமாக உருவாகியுள்ள “வாரண்ட்” வெப் சீரிஸ், வரும் மே 22 முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.
டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ‘விலங்கு’ உலகின் அடுத்த அத்தியாயமாக “வாரண்ட்” பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை படக்குழுவினரிடையே தெளிவாக தெரிந்தது.
🔗https://youtu.be/3j0NBortZ3k?si=M16Q53p10TWuu4dH
“A New Police Action Thriller Born from the ‘Vilangu’ Universe!” — ‘Warrant’ Trailer Launch Becomes an Emotional and Energetic Celebration
As Tamil OTT content continues to gain recognition for delivering unique crime thrillers, ZEE5’s upcoming original web series “Warrant” has now emerged as one of the most anticipated releases in the genre.
Director Prasanth Pandiyaraj, who won praise through the hit series Vilangu, steps into the spotlight this time as the lead actor, creating strong curiosity among audiences. The recently held “Warrant” trailer launch event turned into a grand celebration filled with excitement, emotions, and appreciation from the film fraternity.
Produced by Prasanth Pandiyaraj, P. Vishal, and P.M. Athiswar under the banners of Sivan Pictures and S Studios, the series is directed by Vignesh Natarajan. The screenplay, jointly written by Prasanth Pandiyaraj and Vignesh Natarajan, promises a gripping blend of police investigation, action, and human emotions.

“Vilangu Was Never Just a Series… It Was a Universe!”
Speaking at the event, ZEE5 Series Head Shyam said,
“Vilangu was not just a series; it was a world filled with multiple stories and characters. Warrant is one such important story from that universe. The series showcases how an ordinary man transforms into a powerful police officer.”
He also hinted that Warrant would serve as an important connection leading into Vilangu 2.
Prasanth Pandiyaraj’s Transition from Director to Actor
Sharing his thoughts, Prasanth Pandiyaraj said,
“Vilangu gave us recognition and love from the audience. I believe Warrant will receive the same support. This is a new phase for me as an actor, and I hope audiences embrace this journey too.”
Director Vignesh Natarajan revealed that he strongly believed Prasanth was perfect for the lead role from the moment the script was developed.
“He wasn’t just acting in the series; he stood beside me like a co-director throughout the process,” he added.

“In Five Years, He Might Contest as an MLA!” — Director Pandiraj’s Fun Remark
Director Pandiraj brought laughter to the stage with his light-hearted speech.
“Prasanth has immense self-confidence. At this rate, he might even contest as an MLA in five years!” he joked, while also expressing confidence that Warrant would become a major success just like Vilangu.
Praise from Kavin and Suseenthiran
Actor Kavin appreciated the trailer saying,
“When I watched the trailer, it didn’t feel like a web series at all. It felt like a high-quality theatrical film experience.”
Director Suseenthiran praised Prasanth’s dedication and said that the filmmaker-turned-actor would surely gain recognition on screen as well.
A Positive and Family-Like Shooting Experience
Actresses Kousalya and Meena shared their pleasant experience working on the series. They highlighted the positive atmosphere on the sets and the suspense-filled storytelling.
Meena, who plays a nurse named Sharmi, said,
“The way the story has been presented will definitely connect with audiences.”
A Cinematic OTT Experience
Producers Madhan and Cineesh emphasized that quality web series require strong budgets and powerful storytelling. They also noted that creating web series today is often more challenging than making films.
Blending action, emotion, investigation, and intense drama, “Warrant” is set to premiere on ZEE5 from May 22.
With the trailer already creating strong buzz among viewers, the team strongly believes that Warrant will become the next successful chapter from the expanding Vilangu universe.
Trailer Link:
Warrant Trailer
🔗https://youtu.be/3j0NBortZ3k?si=M16Q53p10TWuu4dH

