
ஓடிடி வெளியீட்டில் புதிய திருப்பம்… மகேந்திரன் நடிப்பில் “நீலகண்டா”
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய பயணத்தை தொடங்கி, பின்னர் தனித்துவமான கதாபாத்திரங்களால் கவனம் பெற்ற நடிகர் மகேந்திரன், தற்போது முழுநீள அதிரடி நாயகனாக தனது புதிய முயற்சியான “நீலகண்டா” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கிறார். திரையரங்க வெளியீட்டை தவிர்த்து, நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த படம், அவரது திரைப்பயணத்தில் ஒரு புதிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
சிறுவயதில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மகேந்திரன், “மாஸ்டர் மகேந்திரன்” என்ற பெயரில் ரசிகர்களிடம் அறிமுகமானார். பின்னர் கதைக்குத் தேவையான முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, மெதுவாக தனது நடிப்பு பரப்பை விரிவுபடுத்தி வந்தார். குறிப்பாக நடிகர் விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படத்தில் இளம் வயது வில்லன் ‘பவானி’ கதாபாத்திரம் மூலம் அவர் தனக்கென ஒரு வலுவான இடத்தை பெற்றார்.
அதன்பிறகு, திரைப்படங்களுடன் இணையத் தொடர்களிலும் கவனம் செலுத்திய மகேந்திரன், தென்னிந்திய அளவில் தனது நடிப்பு பரப்பை விரிவுபடுத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், தற்போது இரண்டு மொழிகளில் உருவான “நீலகண்டா” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்தித்துள்ளார்.
எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர்களாக எம். ஸ்ரீனிவாசுலு மற்றும் டி. வேணுகோபால் செயல்பட்டுள்ள நிலையில், அனில் இனமடுகு நிர்வாக தயாரிப்பை மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரவன் ஜி. குமார் கவனித்துள்ளார்.மார்க் பிரசாந்த் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் மகேந்திரனுடன் யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கர்மா என்ற நம்பிக்கையை வாழ்க்கை முழுவதும் வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்களும், அவனை எதிர்கொள்ளும் ஆபத்தான எதிரியும் இந்த திரைப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. ஆக்ஷன் கலந்த உணர்ச்சி சார்ந்த கதைநடையில் உருவான இந்த படம், மகேந்திரனின் நடிப்பு திறனை வேறு கோணத்தில் வெளிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
நடிகர் மகேந்திரனின் “நீலகண்டா” திரைப்படம் இன்று முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

A New Turn with OTT Release… Mahendran’s “Neelakanda”
Actor Mahendran, who began his journey in Tamil cinema as a child artist and later gained recognition through distinctive roles, is now set to meet audiences as a full-fledged action hero through his latest film “Neelakanda.” Skipping a theatrical release, the film is premiering directly on an OTT platform, marking a new phase in his cinematic career.
Mahendran, who acted alongside several leading stars during his childhood, earned recognition as “Master Mahendran.” Over time, he expanded his acting range by choosing roles that emphasized strong storytelling. Notably, his portrayal of the young villain “Bhavani” in actor Vijay’s film Master brought him significant acclaim and strengthened his position in the industry.
Following that success, Mahendran has diversified his career by working in films as well as web series. He has also expanded his presence across South Indian cinema by acting in Malayalam and Telugu films. Now, he reaches audiences with “Neelakanda,” which has been made in both Tamil and Telugu.
Produced by LS Productions, the film is written and directed by Rakesh Madhavan. The film is produced by M. Srinivasulu and D. Venugopal, while Anil Inamadugu has served as the executive producer. Cinematography and editing have been handled by Sravan G. Kumar, and the music is composed by Mark Prashanth.
Alongside Mahendran, the film features Yashna Muthuluri, Neha Pathan, Snehulal, Ramki, Babloo Prithviraj, Subhalekha Sudhakar, Bharat Reddy, Sathya Prakash, Chitram Seenu, Sivakarthik Thanda, and others in important roles.
The film revolves around the life of a simple tailor who strongly believes in karma. His life takes an unexpected turn when he encounters a dangerous enemy, and the story follows how he confronts the challenges that arise. Blending action with emotional depth, the film is seen as an attempt to showcase Mahendran’s acting abilities from a fresh perspective.
Mahendran’s “Neelakanda” has premiered today on the Sun NXT OTT platform, generating strong anticipation among fans.
