Thursday, November 13
Shadow

ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு தருணம்! 🇮🇳

ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு தருணம்! 🇮🇳

ஜேப்பியார் பல்கலைக்கழகத்திற்கு உலக அரங்கில் பெருமை சேர்த்த சிறப்பான நிகழ்வாக, பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ரெஜீனா ஜேப்பியார் முரளி, நவம்பர் 6, 2025 அன்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025 லண்டன் உலகளாவிய பெருநிறுவன ஆளுகை மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில் (2025 London Global Convention on Corporate Governance & Sustainability) சிறப்பு விருந்தினராகவும் பேச்சாளராகவும் கலந்து கொண்டார்.

இந்த மாநாடு டைரக்டர்ஸ் நிறுவனம் (IOD இந்தியா) ஏற்பாட்டில் நடைபெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து கல்வி மற்றும் வணிகத் துறையில் புகழ்பெற்ற தலைவர்கள் கலந்து கொண்ட இந்த முக்கிய நிகழ்வில், டாக்டர் ரெஜீனா ஜேப்பியார் முரளி அவர்கள் புதுமை, நிலைத்தன்மை மற்றும் கல்வித் தலைமைத்துவம் குறித்து ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.

அவரின் உரை உலக கல்வி மற்றும் நிறுவனர் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது, இந்திய கல்வித்துறைக்கும், ஜேப்பியார் பல்கலைக்கழகத்துக்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மைல்கல் தருணமாக அமைந்துள்ளது.

 

*✨Proud Moment🇮🇳✨*

Our Chancellor Dr. Regeena Jeppiaar Murali was a *Special Guest and Speaker* at the *UK Parliament, London*, during the 2025 London Global Convention on Corporate Governance & Sustainability – Global Business Meet, organized by Institute of Directors (IOD India) on 6 Nov 2025.

She addressed eminent education and business leaders from around the world, sharing her inspiring vision on innovation, sustainability and leadership in education.

👏 A proud milestone for *Jeppiaar University* and Indian academia on the global stage