
பாலியல் கல்வி ஆசிரியராக கிராமத்துக்குள் நுழையும் சுப்பு… சிரிப்பிலும் சிந்தனையிலும் மூழ்கடிக்க வரும் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்!
ஒரு புதிய வேலை, அதுவும் பாலியல் கல்வி அதிகாரியாக ஒரு கிராமத்துக்குள் நுழைய வேண்டிய நிலை. அனுபவமும் இல்லை, அந்தச் சூழலை எப்படி கையாளுவது என்ற புரிதலும் இல்லை. இப்படிப்பட்ட சவாலான சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார் சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் என்ற இளைஞர். அவருடைய வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களே ‘சூப்பர் சுப்பு’ தொடரின் மையக்கதை.
நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடராக உருவாகியுள்ள ‘சூப்பர் சுப்பு’, ஜூலை 2 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகிறது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தத் தொடரில் மிதிலா பால்கர், முரளி ஷர்மா, மானசா சௌத்ரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாகிபூர் என்ற கிராமத்திற்கு பாலியல் கல்வி அதிகாரியாக நியமிக்கப்படும் சுப்பு, அங்குள்ள மக்களிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல முயற்சிக்கும்போது சந்திக்கும் சங்கடங்கள், நகைச்சுவையான தருணங்கள் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்கள் கதையை முன்னெடுக்கின்றன. ஒரு சாதாரண வேலைக்காக வந்த இளைஞனின் வாழ்க்கை, அங்கே சந்திக்கும் அனுபவங்களால் முற்றிலும் மாறிப்போகிறது.
இந்தத் தொடரின் சிறப்பு என்னவென்றால், பொதுவாக திறந்தவெளியில் பேசத் தயங்கப்படும் பாலியல் கல்வி போன்ற ஒரு விஷயத்தை மிகவும் எளிமையாகவும், நகைச்சுவை கலந்த அணுகுமுறையிலும் கையாள முயற்சித்திருப்பதுதான். அதே நேரத்தில் குடும்ப உறவுகள், தலைமுறை இடைவெளிகள், காதல், பொறுப்பு மற்றும் தனிப்பட்ட அடையாளத் தேடல் போன்ற பல்வேறு உணர்வுகளையும் கதை தொட்டுச் செல்கிறது.
இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இந்தத் தொடரை சிலகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருப்பது தொடருக்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
சிரிப்பை மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கும் ஒரு கிராமத்து பயணமாக ‘சூப்பர் சுப்பு’ அமையுமா என்பதை ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

A Sex Education Officer Walks Into a Village… Netflix’s ‘Super Subbu’ Promises Laughs, Emotions, and Thought-Provoking Moments!
A new job, an unfamiliar environment, and the responsibility of educating an entire village about sex education. With little experience and no clear idea of what awaits him, Subrahmanyam Chilukuri Rao, fondly known as Subbu, finds himself in the middle of a life-changing journey. His unexpected experiences form the heart of Netflix’s upcoming Telugu original series, Super Subbu.
Premiering globally on Netflix from July 2, Super Subbu marks the platform’s first Telugu original series. The show stars Sundeep Kishan in the lead role, alongside Mithila Palkar, Murali Sharma, Manasa Choudhary, and several other talented actors.
Set in the vibrant village of Mahipur, the story follows Subbu as he takes up the role of a Sex Education Officer. As he attempts to address a topic that is often considered uncomfortable or taboo, he encounters awkward situations, humorous misunderstandings, and a host of challenges that transform his outlook on life.
What sets Super Subbu apart is its ability to tackle a sensitive subject with warmth, humor, and authenticity. Beyond the laughs, the series explores themes of family relationships, generational gaps, love, responsibility, and self-discovery, making it much more than just a comedy.
Directed by Mallik Ram and produced by Chilkala Productions, the series also features legendary comedian Brahmanandam and a strong ensemble cast, adding further excitement to the project.
Blending humor with heartfelt storytelling, Super Subbu aims to spark conversations while entertaining audiences. Whether Subbu’s journey through Mahipur becomes a memorable experience for viewers worldwide will be revealed when the series begins streaming on Netflix from July 2.
