
போதை கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஆக்ஷன் திரில்லர் — “கொம்பா” மூலம் புதிய முயற்சியில் ராஜ பாரதி!
சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப் பழக்கங்களின் தாக்கத்தை மையமாகக் கொண்டு, அதனை வித்தியாசமான சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரில்லர் வடிவில் சொல்ல வருகிறது “கொம்பா” திரைப்படம். இயக்குனர் ராஜ பாரதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் தற்போது திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது.
Golden Arrow Production நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சண்முகசுந்தரம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, தனித்துவமான “கொம்பா” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக “பக்கி பயலுக” திரைப்படத்தை இயக்கிய ராஜ பாரதி, இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குவதோடு, முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
நாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, பருத்திவீரன் சரவணன், சரண்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் “காந்தாரா” திரைப்படத்தின் மூலம் பிரபலமான கன்னட நடிகர் உக்ரம் ரவி, இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஒளிப்பதிவை சிவா கவனிக்க, இசையமைப்பாளராக புரூஸ் பணியாற்றியுள்ளார். பாடல்களை இயக்குனர் ராஜ பாரதி மற்றும் புரூஸ் இணைந்து எழுதியுள்ளனர். எடிட்டிங்கை செல்வா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்குனராக முரளி பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை ஜோஸ்வா அமைத்துள்ளார். நடன அமைப்பை அப்துல் கவனித்துள்ளதுடன், மேக்கப் பணிகளை மாரியம்மா மேற்கொண்டுள்ளார்.
படம் குறித்து பேசிய இயக்குனர் ராஜ பாரதி,
“இன்றைய இளைஞர்கள் பல்வேறு போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வரும் சூழலில், வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப் பொருட்கள் எப்படி ஒரு குடும்பத்தையும் சமூகத்தையும் சீரழிக்கின்றன என்பதை இந்தப்படம் பேசுகிறது. அப்பா – மகன் உறவின் உணர்வுகளை மையமாகக் கொண்டு, சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்தை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்ல முயற்சித்துள்ளோம். இது பான் இந்தியா அளவில் உருவாகும் படம்,” என்று தெரிவித்துள்ளார்.
சேலம், ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Action Thriller “Komba” Raises Its Voice Against Drug Culture — Raja Bharathi Attempts a Bold New Venture!
The upcoming film “Komba” is set to highlight the growing impact of drug addiction in society through a unique blend of sentiment and action-packed thriller elements. Directed by and starring Raja Bharathi, the film has already begun drawing attention in the industry.
Produced by Shanmugasundaram under the banner of Golden Arrow Production, the film carries the distinctive title “Komba.” After directing “Pakki Payaluga,” Raja Bharathi takes on multiple responsibilities in this project as writer, screenplay writer, dialogue writer, lyricist, director, and lead actor.
Nisha Ismath plays the female lead, while Singam Puli, Paruthiveeran Saravanan, Charanraj, and several others appear in pivotal roles. Kannada actor Ugram Ravi, who gained fame through “Kantara,” plays the antagonist, adding further excitement to the project.
The film’s cinematography is handled by Siva, with music composed by Bruce. Songs are penned jointly by Raja Bharathi and Bruce. Selva takes charge of editing, Murali serves as the art director, and Joshua choreographs the action sequences. Abdul handles choreography, while Mariyamma is in charge of makeup.
Speaking about the film, director Raja Bharathi said:
“Today’s younger generation is increasingly falling prey to various forms of drug addiction. This film talks about how narcotic substances smuggled from foreign countries destroy not only individuals but also families and society at large. Blending a strong father-son emotional bond with a socially relevant message, we have crafted this as a gripping action thriller. The film is being made as a pan-Indian project.”
The shooting of “Komba” is currently progressing briskly in Salem, Yercaud, and surrounding regions.
