
1954ம் வருச இதே ஏப்ரல் 7ம் தேதி ஹாங்காங்கில் பிறந்த அந்தக் குழந்தையை அந்த ஆஸ்பத்திரியே கொஞ்சம் பிரமிப்பா பார்த்துச்சு. ஏன்னா குழ்ந்தையோட எடை 12 பவுண்டு. எப்படியாவது அக்குழந்தையை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த ஹாஸ்பிட்டல் சீஃப் டாக்டர் விரும்பினார். குழந் தையின் பெற்றோரிடம் கேட்க வும் செய்தார். ஆனால் சார்லஸ் சானும் சரி, லீ & லீயும் சரி அதற்கு சம்மதிக்கவி ல்லை. இத்தனைக்கும் சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். லீ & லீ, வீட்டு வேலைகளை செய்பவர். போதிய வருமானம் ஒருபோதும் வந்ததில்லை. ஆனாலும் தங்கள் குழந்தையை தாங்களே வளர்க்க விரும்பினார்கள். சான் காங் & காங் என நாமகரணமும் சூட் டினார்கள். ‘ஹாங்காங்கில் பிறந்தவன்’ என்பதுதான் அப் பெயரின் அர்த்தம்.
சான் காங் & காங், பள்ளியில் சேர்ந்தான். ஆனால் படிப்பு ஏறலை. இந்த நேரத்தில் சார்லஸ் கானுக்கும், லீ & லீக் கும் ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. என்ன..அதே சமை யல் வீட்டு வேலைதான். அதுனாலே தங்கள் மகனை ‘ சைனா டிராமா ஸ்கூல்’ என்ற போர்டிங் ஸ்கூல்லே சேர்த்துட் டு ஆஸ்திரேலியா புறப்பட் டாய்ங்க.
அப்போ நம்ம சான் காங் & காங்குக்கு வயசு ஜஸ்ட் 7. இந்தப் பள்ளியில்தான் சான் காங் & காங், கராத்தே, குங்ஃபூவில் ஆரம்பித்து சகல மார்ஷியல் கலைகளையும் பயின்றான். ஆக்ரோபாடிக்ஸ் உடற்பயிற்சிகளை மேற் கொண்டான்.
சீனாவில் ஓபரா எனப்படும் மேடை நாட்டிய நிகழ்ச்சிகள் மாறுபட்டவை. நடிப்பு, பாடல்களுடன் ஆக்ரோபாடிக்ஸ் உடற்பயிற்சிகளும் ஒன்று கலந்த ஒரு காக் டெயில் வடிவம். பீகிங் ஓபரா இதில் தலை சிற ந்து விளங்கிச்சு. இந்த குழுவுக்கு தேவையான சரியான ஆட்களை பயிற்றுவித்து தருவதுதான் சைனா டிராமா ஸ்கூலின் பணி. கடு மைக்கும், கட்டுப்பாட்டுக் கும் பெயர் போன இப்பள்ளியில் சான் காங்& காங் ஒரு நாளைக்கு 18 மணி நேரங்கள் வரை பயிற்சி எடுத்தான்.
அவனது ஆர்வத்தை பார் த்த பள்ளி 8 வயதில் ‘பிக் அண்ட் லிட்டில் வாங் டின்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. அப்படத்தில் சான் காங் & காங் தன் திறமையை வெளிப்படுத்தினான்.தொடர்ந்து நடிக்க சான்ஸ் கிடைத்தது. பள்ளியில் பயிற்சி பெற்ற படியே நடித்தான். கூடவே ஸ்டண்ட் மாஸ்டராக, ஸ்டண்ட் மேன் ஆக வித்தை காட்டி னான்.
19 வயதில் ப்ரூஸ் லீ நடித்த ‘என்டர் தி டிராகன்’ படத்தில் சிறு வேட ம் கிடைத்தது. அதில் முத்திரை பதித்தான். ஆனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதுனாலே அவனை ஆஸ்திரேலியா வுக்கு வரும்படி அவனது பெற்றோர் அழைத்தார்கள்.
அங்கு போன் சான் காங் & காங், கட்டிட வேலையில் நாள் கூலி அடிப்படையில் பணிபுரிந்தான். அவனது உருவத்தையும் துள்ளலையும் பார்த்த சக தொழிலாளர் அவனை ‘லிட்டில் ஜாக்’ என்று அழைத்தார். அதுவே ஜாக்கி என சுருங்கி போச்சு.
ஒருநாள் வில்லி சான் என்ற தயாரிப்பு நிர்வாகியிடமிருந்து உடன டியாக ஹாங்காங் புறப்பட்டு வரும்படி தந்தி வந்தது.
ஜாக்கிசான் ஆக பெயர் மாறிய சான் காங் & காங் நம்பிக்கையுடன் சென்றான். ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத் தது. அப்போது சான் காங் & காங் என்கிற ஜாக்கி சானுக்கு வயது 21.
அதன்பிறகு நடந்தது அனைத்தும் சரித்திரம். ஸ்டண்ட் மேன், ஸ்ட ண்ட் மாஸ்டர், கதாசிரியர், திரைக்கதையாளர், இயக்குநர், தயாரிப் பாளர் என இடைப்பட்ட காலத்தில் பல முகங்களில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் / வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஜாக்கி சானுக்கு பிறந்த நஆள் வாழ்த்துகளை சொல்வதில் நம் ஆந்தை சினிமா அப்டேட் குழு மகிழ்ச்சி கொள்கிறது
