

மலையாளப் பட உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் நடிகர் பிரேம் நசீர். பிரேம் நசீர் தனது உணர்ச்சி பூர்வ நடிப்பால் ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர். தமிழ்ப் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் 30 படங்களிலும், 600-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் பிரேம் நசீர் நடித்தார்.
குறிப்பாக 600 படங்களில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் என்ற முறையில் “கின்னஸ்” சாதனை படைத்தவரிர்.
ஒரு சுவையான் விசயம் என்னவென்றால் பிரேம்நசீர், A.K.வேலன் தயாரித்த “தைப்பிறந்தால் வழி பிறக்கும்” என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார். S.S.ராஜேந்திரனுடன் பிரேம் நசீர், ராஜசுலோசனா, N.M.ராஜம் நடித்தார்கள். இது 100 நாள் வெற்றிப்படம். அந்த படத்தைத் தொடர்ந்து பிரேம்நசீர்- சவுகார் ஜானகி நடித்த “நல்ல இடத்து சம்பந்தம்” பிரேம்நசீர்- பண்டரிபாய் நடித்த “நான் வளர்த்த தங்கை” மற்றும் “பெரிய கோவில்” படங்கள் வெளிவந்தன.
1959, 1960-ம் ஆண்டுகளிலும் பிரேம் நசீர் நான்கு, ஐந்து தமிழ்ப் படங்களில் தோன்றினார். அதில் குறிப்பிடத்தக்கவைகளில் ஒன்று S.S.ராஜேந்திரனுடன் மீண்டும் சேர்ந்து நடித்த “கல்யாணிக்கு கல்யாணம்” என்ற படமாகும். மேலும் தேவிகா, பாலாஜியுடன் இணைந்து நடித்த “சகோதரி”, நடிகை ராகினிக்கு ஜோடியாக நடித்த “இருமனம் கலந்தால் திருமணம்”, நடிகவேள் M.R.ராதாவுடன் நடித்த “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” ஆகிய படங்களும் வெளிவந்தன.
பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்த மற்றொரு சிறந்த படம் “வண்ணக்கிளி” என்று சொல்லலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் T.R.சுந்தரம் இந்தப் படத்தை தயாரித்தார். T.R.ரகுநாத் டைரக்ட் செய்தார். பிரேம் நசீருடன் T.R.ராமச்சந்திரன், R.S.மனோகர் மற்றும் P.S.சரோஜா, மைனாவதி, முத்துலட்சுமி, M.சரோஜா, C.S.சரசுவதி ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது.
மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய பிரேம் நசீர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சில படங்களில் சேர்ந்து நடித்தார். “பாலும் பழமும்”, “முரடன் முத்து” ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள்.
1964-க்குப் பிறகு மலையாள பட உலகில் அதிக வாய்ப்புகள் குவிந்ததால் பிரேம் நசீர் தமிழ்ப்பட நடிப்பை குறைத்துக் கொண்டார். சென்னை நகரில் அவர் அதிகம் தங்கி இருப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தார். அத்துடன் M.G.R, N.T.ராமராவ் திரை உலகில் இருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டினார்கள். அவர்களை பின்பற்றி மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக விளங்கிய பிரேம் நசீரும் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால் கேரளத்து மக்கள் அவரை ஒரு சிறந்த நடிகர் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்களே தவிர அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பிரேம் நசீரின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறவில்லை.
இப்பேர்பட்ட பிரேம் நசீருக்கு பொறந்த நாள் வாழ்த்து சொல்வதில் ஆந்தை டீம் ஹேப்பி கொள்கிறது
