
விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ க்குப் பின் வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தொடர்ந்து நல்ல கதைகளையும் கதாபாத்திரமும் தேந்தெடுத்து நடித்து வருகிறார். தான் நடிக்கும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் நடிகர்கள் ஒரு சிலர் என்று தான் சொல்லணும் அதில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பை நிச்சயம் பாராட்டும் படி தான் நடித்து வருகிறார்.அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்றும் சொல்லலாம்.
இதுவரை ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ்,வில்லன்களில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்லணும் மருது தாரைதப்பட்டை படங்களில் இவரின் நடிப்பு மிக நேர்த்தியான வில்லன் என்று எல்லோரும் பாராட்டும் நடிப்பை வெளிபடுத்திய ஆர்.கே.சுரேஷ், இப்போது தனி நாயகனாக ‘தனி முகம் ‘பில்லா பாண்டி” வேட்டை நாய்” போன்ற படங்களிலும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.
‘வேட்டை நாய் ‘ கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்தவர் தான் எஸ்.ஜெய்சங்கர்.
இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி ‘மன்னாரு’ இயக்கியவர். ‘வேட்டை நாய் ‘இவரது இரண்டாவது படம் .
நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார்.
ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , ‘என் உயிர்த் தோழன் ‘ ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள் .இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு மதுரை பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது.
ஆர்.கே.சுரேஷ் மற்றும் அறிமுக வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் இருவரும் மோதிக் கொள்வது போல சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.
நாக் அவுட் நந்தா சண்டைக் காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்தார். ஒளிப்பதிவாளர் முனீஸ்வரன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார். டி கடை முன் ஒரு சண்டை காட்சியில் அடுப்பில் பானைகளை வைத்து தீ எரிவது போன்ற இடத்தில் படமானது. அடுப்பில் வெந்நீர் பானைகள் கொதித்துக் கொண்டிருந்தன. வில்லன் விஜய் கார்த்தியும் இருவரும் மோதும் சண்டை காட்சியில் தோசை கல் எடுத்து அடிக்க வரும் வில்லனை தடுக்கும் போது கொத்தித்து கொண்டு இருந்த வெந்நீர் பாயிலர் அப்படியே ஆர்.கே.சுரேஷ் மீது விழ அவரின் கை மற்றும் கால்கள் வெந்துபோனது உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப் பட்டு மருத்துவமனைக்கு மதுரை கொண்டு செல்லப் பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
