

ஒரு காலத்தில் காமெடியில் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சந்தானம்.
அன்றைய இன்றைய மட்டுமில்லாம என்றைக்கும் சினிமா துறையில் காமெடி என்பது மிகவும் பிரபலம். ரசிகர்களை சிரிக்க வைக்க அவர்கள் படும் பாடு அவர்களுக்கு தான் தெரியும்.
அதிலும் இன்றைய சூழலில் ஜஸ்ட் ஒரு போனில் ஒரு மீம்ஸை ஷேர் செய்து சிரிக்க வைக்கும் நவீன உலகில் நடிப்பில் மட்டுமின்றி டயலாக் மூலமும் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.
தற்போதுவரை இவரின் டைமிங் காமெடி திறமை கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
இத்தனைக்கும் இவர் முதலில் தொகுப்பாளராகவும், சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது திறமையை உலகரிய செய்தவர்.
அதன் பிறகு தனது பழக்கத்தால் கடின உழைப்பால் உயர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி கிங்-காகவே திகழ்ந்தார்.
அப்படி காமெடி கதாபாத்திரத்தில் கலக்கிய இவரை அவரை விட சூப்பரா இருக்கே.. இவரை விட ஆக்டிவ்-வா இருக்கே என்று உடனிருந்த சிலரே உசுப்பேத்தியதால் தற்போது ஹீரோவாக மட்டுமே தோன்றி வருகிறார்.
இன்று 40 வயதை கடக்கும் அவருக்கு ஹேப்பி பர்த் டே!
