நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்கான கூடுதல் திரைக்கதையை நடிகை சாந்தி எழுதியுள்ளார். எழுத்தாளரும் இயக்குநருமான டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
சாந்தி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் பல விருதுகளை வென்றுள்ளன. ‘சூரரைப் போற்று’ படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்ற ஷாலினி உஷாதேவி இயக்கிய மலையாளத் திரைப்படம் ‘என்னென்னும்’-ல் சாந்தி நடித்திருந்தார். இந்தப் படம் கேரள மாநில விருதுகள் 2024 இல் சிறப்பு நடுவர் விருதை வென்றது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நியூசெட்டல் இன்டர்நேஷனல் ஃபென்டாஸ்டிக் ஃபிலிம் பெஸ்டிவலில் இத்திரைப்படம் சர்வதேச விமர்சகர் விருதையும் வென்றது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சாந்தியின் முதல் இந்தி படமான ‘குல்மோஹர்’ சிறந்த இந்தி படத்திற்கான விருது வென்றது
அமேசான் ஓடிடி ஒரிஜினல்ஸாக வெளியான நடிகர்கள் லஷ்மி மற்றும் மதுவின் ‘ஸ்வீட் காரம் காபி’ தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார் சாந்தி. தேசிய விருது பெற்ற கிரிஷாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் சோனி தொடரான ’தி க்ரோனிகல்ஸ் ஆஃப் தி 4.5 கேங்’கில் சாந்தி அடுத்து நடிக்கவுள்ளார். தற்போது முரளி கோபியின் திரைக்கதையில், ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் மலையாளம்-தமிழ் பைலிங்குவல் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சாந்தி.
Actor Santhy Balachandran makes a foray into screenwriting.
Santhy has written the additional screenplay for the next project by Dulquer Salmaan’s production house, Wayfarer Films. The film by writer-director Dominic Arun stars Kalyani Priyadarshan and Naslen and had its pooja recently.
Santhy’s recent films as an actor have won several awards. Her Malayalam film Ennennum directed by Shalini Ushadevi who won the National Award for Best Screenplay for Soorarai Pottru won a special jury award at the Kerala State Awards 2024. The film also won the International Critics Award at the highly regarded Neuchâtel International Fantastic Film Festival in Switzerland. Santhy’s debut Hindi film Gulmohar won Best Hindi Film at the recently announced National Awards.
Santhy made her Tamil debut with the popular Amazon original series Sweet Kaaram Coffee alongside veteran actors Lakshmi and Madhoo. She will be next seen in National Award winner Krishand’s much awaited Sony series, The Chronicles of the 4.5 Gang. She is currently shooting for a Malayalam-Tamil bilingual feature film starring actor Arya, scripted by Murali Gopi, directed by Jiyen Krishnakumar and produced by Mini Studios.