Sunday, May 19
Shadow

மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிகரமாக நீட்டிய நடிகர்.”விஐய்விஷ்வா “

 

கனமழை புயல் வெள்ளம் என சென்னை மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது…
சகஜ நிலை திரும்ப இறைவனை வேண்டுகிறேன்

பட வேலை மற்றும் சொந்த வேலை காரணமாக மதுரை மற்றும் தேனியில் இருந்து வருவதால் சென்னை வர இயலாத சூழ்நிலை …. இருப்பினும் மனமெல்லாம் சென்னை பற்றியே இருந்தது … நண்பர்கள் மூலம் இயன்ற நிவாரண பணிகள் தோடர்ந்தது….

ஆனால் இதுவரை கடந்த ஆறு ஆண்டுகளாக களத்தில் நேரிடையாக நின்று இயன்ற நிவாரண பணிகளை செய்த போது கிடைத்த மனதிருப்தி களத்தில் இல்லாமல் மனநிறைவை தர வில்லை…கடுமையான பணிச்சுமைகளுக்கிடையே ஒருநாள் இடைவெளி கிடைத்தால் கூட சென்னை வெள்ள நிவாரண பணியில் ஈடுபடலாமே இறைவா என்ற வேண்டுதல் இறைவனை அடைந்ததோ எண்ணவோ கடந்த 18-11-2021 மட்டும் இடைவெளி கிடைக்க பறந்தேன் ..

என்னை வாழ வைத்த சென்னை நோக்கி …

அது்சரி ஒரு நாளில்
என்ன செய்ய முடியும்
எங்கு செல்வது
எப்படி முடியும் என்ற கேள்விகளுக்கு கிடைத்த பதில்

சமிபத்தில் நான் விருந்தனராக கலந்து கொண்ட
#யுவதி குழுவை் சேர்ந்த உளவியல் நிபுணர்
திருமதி காயத்ரி் அவர்கள் முலமாக களப்பணியில் இருந்த மோனி அவர்களிடம் கிடைத்தது… உடனே தொடர்பு கொண்டேன்…. ராயபுரம் சிக்னல் அருகே உள்ள casagrand luxurious apartment வர கூற நானும் சென்றேன் .

பிரமாண்ட அடுக்கு மாடியில் என்ன நிவாரணம் தேவைப்படும் என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்த போது…

விஐய் என்ற குரல் வந்த திசையில் பார்த்தால் ரெயின்கோட்டல் நடுங்கியபடி மோனி நம்மை வரவேற்றார் ..

அந்த பிரமாண்ட அடுக்கு மாடி காம்பவுண்ட்க்கும் அகலமான புத்தம் புதிய தார்ரோட்டிக்கும் இடையே. அடித்த புயலில் மிச்சிய ்அட்டை போல் கிடந்த குவியல்களுக்கிடையே நானூறு குடும்பங்களை சேர்ந்த ஆயிரம் உயிர்களின் அடைக்கலம் என அறிந்து அதிர்ச்சியடைந்தேன்…

மூன்று பேர் ஒரே நேரத்தில் ஒன்றாக நிற்கவே மிடியாத இடத்தில் மூன்று தலைமுறையாக வசித்து வருகின்றனர்

பிறந்தகுழந்தைகள,இளம்பெண்கள.கர்ப்பிணிகள்,வயதான மற்றும் ஊனமுற்றவர என ்அத்தனை பெண்கள் வர்க்கம் … கலங்இய கண்களோடி அவர்களின் கதையை மோனிஷாகூறிய போது இந்த வெள்ள நீரை விட அவர்களின் கண்ணீர அளவு அதிகம் ….

 

சில அரசியல்வியாதிகள் போல வணக்கமும் வாக்குறுதியும் மட்டும் அளிக்காமல் தற்காலிக நிவாரணமாக யுவதி மூலம் தன்னம்பிக்கைகளயும் தார்பாய்களையும் தந்துவிட்டு மீண்டும் வருவோம் நீங்கள் மீளும் வரை என்று. மனதில் பாரத்தோடு பறந்தேன் மதுரைக்கு… நன்றி

திருமதி .காயத்ரி அவர்கள்
செல்வி. மோனிஷா அவர்கள்
திரு.கார்த்தி அவர்கள்

.மழை்புயல் நிவாரண பணி்யில உதவ நினைத்தால் களப்பணியில் ஈடுபட

#ஒருரூபாய் கூட தேவையில்லை …
#ஒருமணிநேரம் கூட போதும்…

சமூக சேவைக்காக. எத்தனையோ சமூக ஆர்வலர்கள் முழு வாழ்வையும் அர்ப்பணித்து வாழ்ந்து வரும் வேளையில் நமது கரங்களும் இணைந்தால் புயல் மழையால் பாதிக்கபட்டவர்கள் சிறிதளவாது உடனடி நிவாரணமடைவார்கள்

#மனிதர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு. நீதி எவ்வளவு முக்கிய தேவையோ அதைவிட

#இயற்கையால் பாதிக்கபட்டவர்களுக்கு உடனடி உதவி தேவை

டிவிட்டரில் வார்த்தை போர் செய்வதை விட
தெருவில் இறங்கி நாலு பேருக்கு நல்லது செய்யலாமே?

சாதிமதவேறு பாடுகளை கடந்து தமிழனாக மனிதமாக இணைவோம்….பேரிடர் காலங்களில்
எளியவர் துயர் துடைப்போம்..