Thursday, May 30
Shadow

தங்கலான் படப்பிடிப்பில் விபத்து நடிகர் விக்ரம் விலா எலும்பு முறிந்தது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த நடிகர் என்றால் அது விக்ரமும் ஆவார் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பொன்னின் செல்வன் 2 படத்தில் இவரின் நடிப்பை பாராட்டாதவர்கள் கிடையாது. படத்தின் வெற்றிக்கு வழி க பெரிய பங்கு என்றால் அது விக்ரம் என்று சொன்னால் மிகையாகாது. உலகமே அவரின் நடிப்பை பாராட்டி வருகிறது.

இந்த சூழலில் இன்று இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஊருவாகி வரும் தங்கலான் படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டார். சென்னை ஈ வி. பி ல் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது சண்டை காட்சிக்கான பயிற்சியின் போது தவறி விழுந்ததில் அவரின் விலா எலும்பு முறிந்தது மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். விக்ரமை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை ஒரு மாத காலத்துக்கு ஓய்வு எடுக்க சொல்லி உள்ளனர். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைத்தனர் .