

நடிகை காஜல் அகர்வால் தென் இந்தியாவின் முன்னனி நாயகிகளில் ஒருவர் நடிகைகள் பொதுவாக மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்வதில்லை ஆனால் இன்று இவர் செய்துள்ள ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் இழுத்துள்ளார் என்று சொல்லலாம்.
நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், கொரோனா பிரச்சனைகள் மற்றும் அதன் ஆபத்துகள் முழுவதும முடிந்த பிறகு, நமது நாட்டுக்காக சில நன்மைகள் செய்வோம். நமது விடுமுறை நாட்களை இந்தியாவில் செலவிடுவோம், உள்ளூர் உணவகங்ககளில் சாப்பிடுவோம், உள்ளூர் பழங்கள், காய்கறிகளை வாங்குவோம், இந்திய நிறுவனங்களின் உடைகள் மற்றும் பொருட்களை வாங்குவோம், உள்ளூர் வியாபாரிகளை ஆதரிப்போம். காரணம் இந்த தொழில்கள் நமது உதவியின்றி மீண்டு வருவது சற்று சிரமமானது” அப்ப்டீன்னு ஆக்கப்பூர்வமா குறிப்பிட்டுள்ளார்
