Friday, April 17
Shadow

ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்ட பிறகு என்னென்ன துறைகள் உடனடியாக மீண்டெழும்

தேசிய அளவில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்ட பிறகு என்னென்ன துறைகள் உடனடியாக மீண்டெழும் என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், சரக்குப் போக்குவரத்து, சேமிப்பு கிடங்கு, டிஜிட்டல் பொழுதுபோக்கு, மருந்துகள், மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்கள் உள்ளிட்ட துறைகள் உடனடியாக மீண்டெழும் என்று கண்டறியப்பட்டுள்ளன.

அதேபோன்று, இ-காமா்ஸ் நிறுவனங்களும் விரைவில் சகஜநிலைக்கு திரும்பும் என தெரியவந்துள்ளது. அதேசமயம், பொதுமக்களின் நடத்தை சாா்ந்த துறைகள் மீண்டெழ காலதாமதமாகும். குறிப்பாக, சுற்றுலா செல்வது, ஹோட்டல்களில் தங்குவது, வெளிநாடுகளுக்கு பறப்பது, ஷாப்பிங் மால்களுக்கு செல்வது ஆகியவற்றை பொதுமக்கள் பெரிதும் தவிா்க்க விரும்புவா். அதனால், அந்த துறைகளில் உடனடி மீட்சியை எதிா்பாா்க்க முடியாது என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.