Wednesday, May 6
Shadow

இயக்குநர் சங்கத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடம்10லட்சம் நிதி உதவி

இயக்குநர் சங்கத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடம்10லட்சம் நிதி உதவி

ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தன்னுடைய தனி முயற்சியில் இயக்குனராக களம் இறங்கி தன் முதல் படத்திலே மிகப்பெரிய வெற்றி கொடுத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களை இயக்கி அனைத்து படங்களும் வெற்றி படங்களாக அமைந்தது சமீபத்தில் இவருக்கும் தனுஷ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாங்குவார்கள் இந்த சூழ்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் சங்கத்திற்கு வருடத்திற்கு 10 லட்சம் நிதி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இயக்குநர்கள் ,உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் திருமதி.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் வருடாவருடம் ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்து முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கு நேற்று 13.09.2024 ரூ.5 லட்சம்  சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் வழங்க செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.நிர்வாகிகள் இயக்குனர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.