Friday, May 27
Shadow

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று இருக்கும் அமேசான் ஒரிஜினல் சீரிஸான ‘புத்தம் புது காலை விடியாதா

 

*பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அமேசான் ஒரிஜினல் சீரிஸான ‘புத்தம் புது காலை விடியாதா’ தொடருக்கு பெரும் வரவேற்பை கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த ஆந்தாலஜிக்களில் ஒன்று எனவும் பாராட்டி வருகின்றனர்.*

பொங்கல், சக்ராந்தி, பிஹு, லோஹ்ரி ஆகிய விசேஷ நாளில் அமேசான் ப்ரைம் வீடியோ தனது ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜியின் இரண்டாம் பாகமான ‘புத்தம் புது காலை விடியாதா…’ தொடரின் மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கிறது. இத்தொடரின் மூலம் இதயம் வருடும், ஆன்மாவை கிளரும் கதைகளை இந்த ஊரடங்கு காலகட்டத்தில் ஆண்டின் மிகச்சிறந்த ஆந்தாலஜி தொடராக முன்வைக்கிறது.

இந்த ஆந்தாலஜி தொடரை பற்றிய தங்களது விமர்சனங்களை பகிர்ந்துள்ள பார்வையாளர்களும், விமர்சகர்களும் இதனை தங்களது மிகச்சிறந்த ஃபேவரிட் என குறிப்பிட்டுள்ளனர். நடிகர்களின் மிகச்சிறந்த நடிப்புடன் கூடிய 5 எபிசோட்களைக் கொண்ட இந்த தமிழ் ஆந்தாலஜி, புதிய தொடக்கம் மற்றும் நம்பிக்கைக்கான செய்தியுடன் கூடிய 5 வெவ்வேறு கதைகளை சொல்கிறது.

இத்தொடரைப் பற்றிய பார்வையாளர்களின் கருத்தை இங்க காணலாம்:

5 எபிசோட்களும் பார்வையாளர்களின் மனதில் ஒரு நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, விமர்சகர்களும் ஒவ்வொரு நடிகரின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர். நாடியா முதல் ஜோஜு வரை, லிஜோமோல் ஜோஸ் முதல் அர்ஜுன் தாஸ், சனந்த், ஐஸ்வர்யா என ஒவ்வொருவரின் நடிப்பும் மறக்கமுடியாத ஒன்று என்று புகழ்ந்துள்ளனர். இன்னும் சிலரோ இத்தொடரை கண்களுக்கு விருந்து என்றும், மனதில் நெருக்கமான ஒன்று என்றும் கூறுகின்றனர்.

‘புத்தம் புது காலை விடியாதா….’ தொடரின் ஒவ்வொரு கதையும் தனித்தனியானது எனினும் அவை அனைத்தும் நம்பிக்கை என்னும் சுயத்தை உணர்தல் மற்றும் மனித உறவுகள் வழியான புதிய தொடக்கம் என்ற ஒரே கதைக்கருவினால் இணைக்கப்பட்டுள்ளன. இவை நம்பிக்கை, காதல், இரண்டாம் வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டு இரண்டாவது கோவிட் 19 ஊரடங்கின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைகள். ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி ஜி. கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நாடியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ள இக்கதைகளை பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்ய கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘புத்தம் புது காலை விடியாதா….’ இதயத்தை வருடும் கதை சொல்லலுடன் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உறுதியளிக்கிறது. மேலும் துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் நெஞ்சுரத்தைக் கொண்டாடுகிறது. இதன் மூலம் இது வருடத்தின் சிறந்த ஆந்தாலஜியாக மாறுகிறது. தற்போது இத்தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.

On the auspicious occasion of Pongal, Sakranti, Bihu and Lohri, Amazon Prime Video treated the audience with the second installment of the anthology Putham Pudhu Kaalai – ‘Putham Pudhu Kaalai Vidiyaadhaa…’, putting forward heartwarming and soul stirring stories from the lockdown, being touting as the ‘best Anthology of the year’.

The audiences and critics have shared their verdict on the anthology and called it a massive favourite, across. The 5 episodes Tamil Anthology, shares 5 different stories revolving around the message of hope and new beginnings, combined with the powerful performances by the cast.

Check out what the audience has to say about it –

Not only the 5 episodes have left a long-lasting impression on the minda of the audience, but the critics too are all praise for the performances of each of the actors. From Nadiya to Joju, Lijomol Jose to Arjun Das and Sanath, Aishwarya … each performance has been hailed as a memorable one — some calling this a treat to watch and keep closer to heart.

Each story in Putham Pudhu Kaalai Vidiyaadhaa… is standalone and yet they are all bound together by the theme of personal discovery of hope and new beginnings through human connection. These are stories of optimism, love and second chances, set in the second Covid-19 lockdown. The stories feature Aishwarya Lekshmi, Arjun Das, Dhilip Subbarayan, Gouri G Kishan, Joju George, Lijomol Jose, Nadiya Moidu, Nirmal Pillai, Sananth, and TeeJay Arunasalam, and are directed by Balaji Mohan, Halitha Shameem, Madhumita, Richard Anthony and Surya Krishna.

Following the success of the first edition, Putham Pudhu Kaalai Vidiyaadhaa… promises to enthrall audiences with a heartwarming narrative that celebrates the spirit of resilience and grit in the face of adversity, successfully making it the ‘Anthology of the Year’. Streaming now on Amazon Prime Video!