
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அறிவழகன் வருடத்திற்கு ஒரு படம் என்று தான் கொடுப்பார் ஆனால் தரமான படமாய் கொடுப்பார் குறிப்பாக அறிவழகன் படங்கள் என்றாலே அது திரில்லர் படங்களாக தான் இருக்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கதைக்களத்துடன் நம்மை சந்திப்பார். இவரின் ஹாரர் படங்கள் என்றாலே அதற்கு ஒரு தனி வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து தான் வருகிறது இவர் முதல் படம் அது கொண்டு இன்றுவரை திரில்லர் ஹாரர் படங்களை தான் தேர்ந்தெடுத்து செய்து வருகிறார் இவை அனைத்துமே தரமான படங்களாகவும் சிறந்த கதை அமைப்புள்ள படங்களாக தான் அமைந்துள்ளது அந்த வகையில் இவரின் அடுத்த படைப்பாக மீண்டும் ஒரு திரில்லர் படத்தை கையில் எடுத்திருக்கிறார்.
இந்த படத்தின் நாயகியாக அதிதி சங்கர் இயக்குனர் சங்கரின் மகள் ஆன அதிதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக இருந்தாலும் இவரின் கதாபாத்திரம் தான் முக்கிய வாய்ந்த பாத்திரமாக அமைத்துள்ளார் கிட்டத்தட்ட இந்த படத்தின் கதாநாயகன் என்று கூட இவரை சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். இதுவரை குறும்புத்தனங்களின் படத்தில் நடித்து வந்திருந்த அதிதி இந்த படத்தில் மாறுபட்ட நடிப்பை தருவார் என்று நாம் எதிர்பார்க்கலாம். இந்த படத்தை அருண் விஜய் நண்பர் ஆன இந்திரஜித் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு மற்ற மத்த நட்சத்திர தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது