Thursday, February 5
Shadow

தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு கடல் கடந்த கௌரவம்

தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு கடல் கடந்த கௌரவம்

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மை செயல், தமிழகத்தைத் தாண்டி வெளிநாடுகளிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி தி.நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த போது, கேட்பாரற்று சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை பத்மா கண்டெடுத்தார். உடனடியாக அவர் அந்த பையை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் காவல்துறையின் முயற்சியால் அந்த நகைகள் உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.
பத்மாவின் இந்த நேர்மையான செயலுக்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், பத்மாவின் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கி கௌரவித்தார்.மேலும், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பத்மாவை தனது இல்லத்திற்கு அழைத்து நேரில் பாராட்டியதுடன், தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.


இந்நிலையில், பத்மாவின் நேர்மையான செயல் வெளிநாட்டிலும் கவனம் பெற்றுள்ளது. மலேசிய சட்டத்துறை துணை அமைச்சரான திரு. மு. குலசேகரன், இந்த சம்பவத்தை அறிந்து தனது உதவி அதிகாரி வடிவுக்கரசியை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவை கௌரவிக்க ஏற்பாடு செய்தார்.

வடிவுக்கரசி, பத்மா பணியாற்றும் இடத்திற்கே நேரில் சென்று அவருக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டினார். அப்போது வீடியோ கால் மூலம் மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் திரு. மு. குலசேகரன் பத்மாவுடன் பேசிக் கொண்டு, அவரது நேர்மையை மனமாரப் பாராட்டினார்.
தூய்மை பணியாளரான பத்மாவின் இந்த செயலுக்கு சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

An honor that crossed the seas to find sanitation worker Padma Malaysia’s Deputy Minister of Law honoured sanitation worker Padma by presenting a gold ring

Padma hails from Pillaiyar Koil Street, Triplicane, Chennai. A sanitation worker, she was engaged in cleaning work at T. Nagar on January 11 when she found an unattended bag containing 45 sovereigns of gold jewellery on the roadside. She immediately handed it over to the Pondy Bazaar Police Station. The jewellery was later safely returned to its rightful owner.

Following this beautiful gesture, Padma started winning appreciations and was extolled with praises beyond the boundaries of Tamil Nadu. Honourable TN Chief Minister M.K. Stalin appreciating her honesty, congratulated and gifted sum of One Lakh Rupees.

Superstar Rajinikanth invited Padma to her residence, appreciated her good gesture, and gifted a gold chain.

In this context, recognition for sanitation worker Padma’s honesty has now crossed the seas to find her. Yes, after learning about Padma’s sincere and honest act, Malaysia’s Minister of Law, Mr. M. Kulasekaran, sent his assistant officer, Vadivukarasi, to Chennai. Through her, he honoured Padma by presenting and adorning her with a gold ring.

Officer Vadivukarasi directly visit the work place of Padma and gifted her the gold ring. During this occasion, Malaysia’s Minister of Law, Mr. M. Kulasekaran interacted with Padma through video call and congratulated her for showcasing pure honesty.